கீர்த்தியின் நடிப்பை புகழும் ரா‌ஷ்மிகா

முன்­பெல்­லாம் நடி­கை­க­ளுக்கு இடையே பலத்த போட்டி இருப்­ப­தாக தொடர்ந்து தக­வல் வெளி­யா­கும். ஒரு நடிகை மற்­றொரு நடி­கை­யின் வாய்ப்­பு­க­ளைத் தட்­டிப்­ப­றிப்­ப­தா­க­வும் புகார்­கள் எழும்.

ஆனால் இப்­போது இதில் தலை­கீழ் மாற்­றம் ஏற்­பட்­டுள்­ளது. இரண்டு மூன்று நாய­கி­கள் ஒரே படத்­தில் இணைந்து நடிக்­கின்­ற­னர்.

ஒரு நடிகை தனக்­குப் பதி­லாக இன்­னொரு நடி­கையைப் பரிந்துரைக்கும் ஆச்­ச­ரி­ய­மும் நிகழ்­கிறது. ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் மன­தா­ரப் பாராட்­டிக் கொள்­கி­றார்­கள்.

அந்த வகை­யில் ‘பெண்­கு­யின்’ படத்­தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பு பிர­மா­தம் என்­கி­றார் ராஷ்­மிகா மந்­தனா.

அண்­மை­யில் இணை­யத்­தில் நேர­டி­யாக வெளி­யீடு கண்­டது ‘பெண்­கு­யின்’. ஈஸ்­வர் கார்த்­திக் இயக்­கத்­தில், கார்த்­திக் சுப்­பு­ராஜ் தயா­ரித்­துள்ள இப்­ப­டம் குறித்து கல­வை­யான விமர்­ச­னங்­கள் வந்­துள்­ளன.

இந்­நி­லை­யில் இரு­தி­னங்­க­ளுக்கு முன்­பு­தான் இப்­ப­டத்­தைப் பார்த்­தா­ராம் ராஷ்­மிகா. படம் மிக­வும் பிடித்­துப்போகவே உட­ன­டி­யாக தமது கருத்தை சமூக வலைத்­த­ளப் பக்­கங்­களில் பதி­விட்­டுள்­ளார்.

“நேற்று இர­வு­தான் ‘பெண்­கு­யின்’ படத்­தைப் பார்த்­தேன். கீர்த்தி சுரேஷ் நடிப்பு கச்­சி­த­மாக இருந்­தது. எப்­போ­தும் போலவே அருமையாக நடித்­துள்­ளார்.

“இந்­தப் படம் அனைத்து தாய்­மார்­க­ளுக்­கும் பொருத்­த­மான படைப்­பாக இருக்­கும். இயக்­கு­நர் ஈஸ்­வர் கார்த்­திக்­கை­யும் கார்த்­திக் சுப்­பு­ராஜ் சாரை­யும் தனி­யா­கப் பாராட்ட வேண்­டும்,” என்று தமது பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார் ராஷ்­மிகா மந்­தனா.

அது­மட்­டு­மல்ல, கடந்த இரு தினங்­க­ளாக தன்­னைத் தொலை­பேசி வழி தொடர்­பு­கொண்ட பல­ரி­ட­மும் இப்­ப­டத்தை தவ­றா­மல் பார்க்­கும்­படி சிபா­ரிசு செய்து வரு­கி­றா­ராம்.

ராஷ்­மிகா நடித்த நேர­டித் தமிழ்ப் படம் இன்­னும் வெளியாகவில்லை என்று ரசி­கர்­கள் வருத்­த­மாக உள்­ள­னர். இந்நிலை­யில் இந்த ஊர­டங்கு வேளை­யின்­போது இரண்டு தமிழ் இயக்­கு­நர்­கள் கூறிய கதை­கள் ராஷ்­மி­கா­வுக்கு மிக­வும் பிடித்­தி­ருக்­கி­ற­தாம்.

எனவே, அந்த இரண்டு படங்­க­ளி­லும் அவர் நடிப்­பது கிட்­டத்­தட்ட உறு­தி­யாகி விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!