ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரைத் தொடர்ந்து வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள படமும் நேரடியாக இணையத்தில் வெளியீடு காண உள்ளதாகத் தகவல்.
வரலட்சுமி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'டேனி'.
சந்தானமூர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் யோகிபாபு, சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.
ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் இந்தப் படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிடுவது என தயாரிப்புத் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

