சேரன்: வாய்ப்பை நழுவவிட்டது நான் செய்த மிகப்பெரிய தவறு

சேரன்: வாய்ப்பை நழுவவிட்டது நான் செய்த மிகப்பெரிய தவறு

1 mins read
aea4dc74-00ea-4f8e-9fe0-b6e47a69749d
'தவ­மாய் தவ­மி­ருந்து' படத்தை இயக்­கி­ய­போ­து­தான் இவ­ரது இயக்­கத்­தில் நடிக்க முன்­வந்­தா­ராம் விஜய். எனி­னும் அப்­ப­டத்­தின் தயா­ரிப்­பா­ளர் பாதிக்­கப்­ப­டக்­ கூடாது என்­ப­தால் விஜய்யை வைத்­துப் படம் இயக்க முடி­யா­மல் போயிற்று என வருந்துகிறார் இயக்குநர் சேரன். படம்: ஊடகம் -

நடி­கர் விஜய் தமது இயக்­கத்­தில் நடிக்க முன்­வந்­த­போது அதைப் பயன்­ப­டுத்­திக் கொள்­ளா­தது வாழ்க்­கை­யில் தாம் செய்த மிகப்­பெ­ரிய தவறு என்று இயக்­கு­நர் சேரன் தெரி­வித்­துள்­ளார்.

'தவ­மாய் தவ­மி­ருந்து' படத்தை இயக்­கி­ய­போ­து­தான் இவ­ரது இயக்­கத்­தில் நடிக்க முன்­வந்­தா­ராம் விஜய். எனி­னும் அப்­ப­டத்­தின் தயா­ரிப்­பா­ளர் பாதிக்­கப்­ப­டக்­ கூடாது என்­ப­தால் விஜய்யை வைத்­துப் படம் இயக்க முடி­யா­மல் போன­தாம்.

"விஜய்யை நேரில் சந்­திக்­கும்­போது இதற்­காக வருத்­தம் தெரி­வித்து எனது நிலை­யைப் புரி­ய­வைப்­பேன்.

"முன்பு 'ஆட்­டோ­கி­ராப்' கதையை விஜய்­யி­டம் மூன்று மணி நேரம் விவ­ரித்­தேன். ஒரு சிறு அசை­வு­மின்றி தொலை­பேசி குறுக்­கீ­டு­க­ளின்றி என் முகத்தை மட்­டுமே பார்த்­துக்கொண்டு பொறு­மை­யா­கக் கதை கேட்­டார்.

"ஒருமுறை குடிக்கத் தண்ணீர் வேண்டுமா என்று மட்டும் என்னை நோக்கிக் கேட்டார். கதையில் தான் அவரது முழுக் கவனமும் இருந்தது. இந்த அர்ப்­ப­ணிப்­பு­தான் அவர் உய­ரங்களை எட்­டிப்­பி­டிக்க கார­ணம்," என்று இயக்­கு­நர் சேரன் தெரி­வித்­துள்­ளார்.