நான்கு மொழிகளில் வெளியாகிறது 'சக்ரா'

நான்கு மொழிகளில் வெளியாகிறது 'சக்ரா'

1 mins read
78175fb5-11d8-43b0-bb91-0b885b83a62b
'சக்ரா' படத்தில் வி‌ஷால் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். படம்: ஊடகம் -

விஷால் நடிப்பில் உருவாகும் 'சக்ரா' நான்கு மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக விஷாலின் படங்கள் தெலுங்கில் மட்டுமே மொழிமாற்றம் செய்யப்படும். இம்முறை அவரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் இணைந்து நடித்துள்ள 'சக்ரா'வை மலையாளம், கன்னடத்திலும் மொழிமாற்றம் செய்ய உள்ளனர். 'சக்ரா'வின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பை இன்று நடிகர்கள் ஆர்யா, கார்த்தி, மோகன்லால், ராணா டகுபதி ஆகியோர் வெளியிட உள்ளனர்.

விஷால் இப்படத்தில் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவைக் கவனிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.