காட்டில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு 'கா'

1 mins read
7b553a9a-9485-42f0-baaf-dafeaad74c40
நாஞ்சில். இயக்கும்'கா' படத்தில் புகைப்படக் கலைஞராக நடிக்கும் ஆண்ட்ரியா. -

நாஞ்சில் இயக்கத்தில் ஆன்ட்ரியா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'கா'. இதில் கொடிய மிருகங்கள் வாழும் காட்டிற்குள் சென்று அவற்றின் வாழ்க்கை முறையை, குணாதிசயங்களைப் பதிவு செய்யும் புகைப்படக் கலைஞராக நடிக்கிறார் ஆன்ட்ரியா. மிகவும் ஆபத்தான பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி உள்ளனராம். மொத்தம் 30 நாட்கள் நடந்த படப்பிடிப்பின்போது ஆன்ட்ரியா கொஞ்சம்கூட பயமோ தயக்கமோ இன்றி ஒத்துழைப்பு அளித்தார். இந்தக் காட்சிகளைத் திரையில் பார்க்கும்போது நிச்சயம் பிரமிப்பாக இருக்கும்," என்கிறார் நாஞ்சில்.