மஞ்சிமா: திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புக்காகக் காத்திருப்பேன்

திற­மை­சா­லி­களை ஊக்­கு­விக்­கும் வகை­யில் புதிய அமைப்பு ஒன்றை நடிகை மஞ்­சிமா மோகன் உரு­வாக்கி இருப்­பது தெரி­யும். தற்­போது அந்த அமைப்­புக்­கான பணி­கள் வேகமாக நடை­பெற்று வரு­கின்றன.

இந்­நி­லை­யில் அண்­மைய பேட்டி ஒன்­றில், தமிழ் சினி­மா­வின் போக்கு குறித்­தும் தாம் நடித்­து­வ­ரும் படங்­கள் குறித்­தும் பல விஷயங்­களைத் தெரி­வித்­துள்­ளார் மஞ்­சிமா.

தற்­போது தமி­ழில் ‘களத்­தில் சந்­திப்­போம்’ படத்­தில் ஜீவா, அருள்­நிதி, பிரியா பவானி சங்­க­ரு­டன் நடித்து வரு­ப­வர், ‘துக்­ளக் தர்­பார்’ படத்­தில் விஜய் சேதுபதியுடனும், ‘எ­ஃப்.ஐ.ஆர்.’ படத்­தில் விஷ்ணு விஷா­லு­ட­னும் இணைந்­துள்­ளார்.

“எஃப்.ஐ.­ஆர். படத்­தில் எனக்கு வழக்­க­றி­ஞர் கதா­பாத்­தி­ரம். ஏற்­க­னவே ‘தேவராட்டம்’ படத்­தி­லும் வழக்­க­றி­ஞ­ராக நடித்துள்­ளேன்.

“ஆனால், அதில் சாதா­ர­ண­மாக வந்து போவேன் எனில், ‘எப்ஃ.ஐ.ஆர்’ல் கதா­நா­ய­க­னு­டன் சம்­பந்­தப்­பட்ட முக்கி­ய­மான தரு­ணங்­களில் எனது கதா­பாத்­தி­ர­மும் இடம்­பெற்­றி­ருக்­கும்,” என்று சொல்­லும் மஞ்­சிமா, திரை­ய­ரங்கு சென்று படம் பார்ப்­ப­து­தான் அதிக உற்­சா­கம் தரும் என்­கி­றார்.

கொரோனா ஊர­டங்கு கார­ண­மாக இணை­யம் வழி படங்­களை வெளி­யி­டு­வது தற்­கா­லி­க­மான ஏற்­பா­டாக இருந்­தால் நல்­லது என்­பது­தான் இவ­ரது கருத்­தாம்.

“ஒரு படத்தை திரை­ய­ரங்­கில் பார்க்­கும்­போது கிடைக்­கும் அனு­ப­வத்தை இணை­யம் வழி படம் பார்க்­கும்­போது கிடைக்­கும் அனு­ப­வத்­து­டன் ஒப்­பிட முடி­யாது.

“விஜய் நடிக்­கும் புதுப் படத்­தின் முதல் காட்­சியை இணை­யத்­தில் பார்த்­தால் எப்­படி இருக்­கும் என்று யோசித்­துப் பாருங்­கள்.

“முதல் நாள், முதல் காட்சி அதி­லும் நூற்­றுக்­க­ணக்­கான ரசி­கர்­கள் முன்­னி­லை­யில் பார்க்­கும் அனு­ப­வம் அலா­தி­யா­னது.

“அதே­ச­ம­யம் ‘பொன்­ம­கள் வந்தாள்’, ‘பென்குயின்’ ஆகிய படங்­கள் அதி­ர­டி­யாக இணையத்தில் வெளி­யீடு கண்­டி­ருப்­ப­தை­யும் மறுக்க இய­லாது,” என்று சொல்­லும் மஞ்­சிமா, ‘பெண்­களை மையப்­ப­டுத்தி’ என்று கூறி படங்­களை விளம்­ப­ரப்­ப­டுத்­து­வது தமக்கு அறவே பிடிக்­காது என்­கி­றார்.

ஒரு கதையை உரு­வாக்­கும்­போது, அதைப் பட­மாக்­கும்­போது பெண் கதா­பாத்­தி­ரங்­க­ளுக்கு உரிய முக்­கி­யத்­து­வம் கொடுத்­தால் அவை­யும் ரசி­கர்­களால் பேசப்­படும் என்­கி­றார்.

“பெண்­களை மையப்­ப­டுத்­திய படம் என்று சொல்­வது சரி­யல்ல. பெரிய கதா­நா­ய­கன் இருந்­தா­லும்­கூட ஒரு நடி­கை­யால் ஒரு படத்தை தன் தோள்­களில் சுமக்க முடி­யும். உதா­ர­ணத்­திற்கு ‘நானும் ரௌடி­தான்’ படம் நயன்­தாரா இல்­லா­மல் முழுமை அடை­யாது. அதே­போன்று ‘விண்­ணைத் தாண்டி வரு­வாயா’வில் திரி­ஷா­வின் கதா­பாத்­தி­ரத்­தைக் குறிப்­பி­ட­லாம். அந்தக் கதை அவ­ரது கதா­பாத்திரத்தை வைத்­துத்­தான் நக­ரும்.

“ஒரு பெண் முதன்­மைக் கதா­பாத்­தி­ரத்தில் நடிப்­ப­தால் மட்­டுமே அது பெண்­களை மையப்­படுத்­தும் பட­மாகி விடாது என நான் நம்புகிறேன். ஆண், பெண் என இரு­வ­ருக்குமே சம­மான முக்­கி­யத்­து­வம் இருக்­கும் பட்­சத்­தில் அதைப் பெண்­களை மையப்­ப­டுத்­திய படம் என்று தயக்­க­மின்­றிச் சொல்­ல­ மு­டி­யும்,” என்கிறார் மஞ்­சிமா மோகன்.

இவ­ரது சொந்த ஊர் கேர­ளா­வில் உள்ள திருவனந்­த­பு­ரம். மலை­யா­ளத்­தில் குழந்தை நட்­சத்­தி­ர­மாக அறி­மு­க­மான இவர், வளர்ந்து ஆளான பிறகு அதிக எண்­ணிக்­கை­யி­லான மலை­யா­ளப் படங்­களில் நடிக்­க­வில்லை.

ஒரு­வேளை தமி­ழில் அறி­மு­க­மா­கா­மல் இருந்­தி­ருந்­தால் தாம் நடித்த மலை­யா­ளப் படங்­க­ளின் எண்­ணிக்­கை­யும் அதி­க­மாக இருந்­தி­ருக்­கும் என்­கி­றார்.

“மலை­யா­ளத்­தில் ‘ஒரு வடக்­கன் செல்ஃபி’ படத்­தில் நடித்து முடித்­த­தும் ‘அச்­ச­மென்­பது மட­மை­யடா’ பட ­வாய்ப்பு தேடி­வந்­தது. அதற்­காக அதிக நாட்­கள் கால்­ஷீட் ஒதுக்­க­ வேண்டும் என்று இயக்­கு­நர் கௌதம் மேனன் கூறி­விட்­டார்.

“இதே­போல் தான் நடித்த இதர தமிழ் படங்­க­ளுக்­கா­க­வும் அதிக நாட்­கள் கால்­ஷீட் தர­வேண்டி இருந்­தது. இத­னால்­தான் மலை­யா­ளப் படங்­களில் அதி­கம் நடிக்க முடி­ய­வில்லை.

“எனி­னும் 2018ல் நிவின் பாலி­யு­டன் ஒரு மலை­யா­ளப் படத்­தில் நடிக்க வாய்ப்பு வந்­த­போது தயங்­கா­மல் ஒப்­புக்­கொண்­டேன். இத்­த­னைக்­கும் அதில் ஐந்­தாறு காட்­சி­கள் மட்­டுமே வந்து போவேன். ஆனா­லும் மலை­யா­ளத்­தில் நடித்த திருப்தி கிடைத்­தது. எந்த மொழியாக இருந்தாலும் என் திறமையை வெளிப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பேன். எனக்கு எதிலும் அவசரம் இல்லை,” என்­கி­றார் மஞ்­சிமா மோகன்.