ஜிவி பிரகாஷ் தற்போது பத்து படங்களில் நாயகனாக ஒப்பந்தமாகி உள்ளார். அவற்றுள் ஒன்று 'காதலிக்க யாருமில்லை'. கமல் பிரகாஷ் இயக்கும் இப்படத்தில் ரைசா வில்சன் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் யோகிபாபு, குரு சோமசுந்தரம், ஷாரா, ஆனந்தராஜ் ஆகியோரும் உள்ளனர். 'நேருக்கு நேர்' உள்ளிட்ட படங்களில் நடித்த கவுசல்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இது நகைச்சுவை கலந்த திகில் படமாக உருவாகிறது. காதல் காட்சிகள் இளையர்களைக் கவரும் வகையில் இருக்குமாம்.
நகைச்சுவையும் திகிலும் கலந்து உருவாகிறது 'காதலிக்க யாருமில்லை'
1 mins read
கமல் பிரகாஷ் இயக்கும் 'காதலிக்க யாருமில்லை' படத்தில் ரைசா வில்சன் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். நகைச்சுவை கலந்த திகில் படமான இதில் முக்கிய வேடம் ஏற்றுள்ளார் நேருக்குநேர் படத்தில் கெளசல்யா. படம்: ஊடகம் -

