மறைந்த பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் வாழ்க்கை திரைப்படமாகிறது.
தன் தந்தையின் வாழ்க்கையைப் படமாக்க விரும்புவதாக வாசுதேவனின் மகன் யுகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது தந்தையின் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதிதான் பொருத்தமானவர் என்று தாம் கருதுவதாகவும் கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி ஏற்கெனவே இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைக் கதையில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மறைந்த மலேசியா வாசுதேவன் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப் பாடல்களைப் பாடியவர்.

