'அயலான்' படத்தில் இருந்து நான் விலகவில்லை: ரகுல் பிரீத் சிங்

'அயலான்' படத்தில் இருந்து நான் விலகவில்லை: ரகுல் பிரீத் சிங்

1 mins read
30ce2fe0-33f8-4359-9652-bde6e74c9602
'அயலான்' படத்தில் இருந்து நான் விலகிவிட்டதாக கூறப்படுவது வதந்திதான் என்று கூறுகிறார் ரகுல் பிரீத் சிங். படம்: ஊடகம் -

'அயலான்' படக்குழுவிலிருந்து தாம் விலகிவிட்டதாக வெளியான செய்தியை நடிகை ரகுல் பிரீத் சிங் மறுத்துள்ளார்.

சிலர் வேண்டுமென்றே இவ்வாறு பொய்த் தகவலைப் பரப்புவதாக அவர் தமது சமூக வலைத்தளப் பதிவில் காட்டத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா கிருமித் தொற்றுக்குப் பயந்து படப்பிடிப்பில் பங்கேற்க ரகுல் மறுப்பதாகவும் இதனால் கோபமடைந்த படக்குழுவினர் அவரைப் படத்திலிருந்து வெளியேற்ற முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது.

இத்தகவலை 'அயலான்' இயக்குநர் ரவிகுமார் மறுத்திருப்பதுடன், படப்பிடிப்புக்கு மிகுந்த ஒத்துழைப்பு அளிப்பவர்களில் ரகுல் பிரீத் சிங் முதன்மையானவர் என்றும் தெரிவித்துள்ளார். "இப்போது யார் படப்பிடிப்பு நடத்துகிறார்கள் என்று என்னிடம் சொல்லுங்கள். நானும் அப்பணியில் பங்கேற்க மிகவும் ஆர்வமாக உள்ளேன்," என்று தெரிவித்துள்ளார் ரகுல்.