சுடச் சுடச் செய்திகள்

ஒரு பக்கம் நடிகை; இன்னொரு பக்கம் பாடகி

இரண்டு பணி­க­ளை­யும் எந்த ஒரு குறையுமில்லாமல் நேர்த்­தி­யா­கச் செய்து வரு­கி­றார் அதிதி ராவ்.

வசந்­த­பா­லன் இயக்­கத்­தில் ஜி.வி. பிர­காஷ் நடிக்­கும் ‘ஜெயி­லுக்­காக’ எனும் படத்­துக்­காக தனு­ஷு­டன் இணைந்து ‘காத்­தோடு காத்­தா­னேன்... கண்ணே உன் மூச்­சா­னேன்’ என்ற பாடலை அசத்­த­லா­கப் பாடி­யுள்­ளார் அதிதி ராவ்.

ஒரு­பக்­கம் நடிகை, மற்­றொரு பக்­கம் பாடகி என இரண்டு பணி­க­ளை­யும் எந்த ஒரு குறையுமில்லாமல் நேர்த்­தி­யா­கச் செய்து வரு­கி­றார் இந்த இளம் நாயகி.

தற்­போது ‘பொன்­னி­யின் செல்­வன்’, நடன இயக்­கு­நர் பிருந்தா இயக்­கும் முதல் பட­மான ‘ஹே சினா­மிகா’ என தமி­ழில் இரு படங்­க­ளி­லும் மலை­யா­ளத்­தில் ஒரு படத்­தி­லும் நடித்­துக் கொண்­டி­ருக்­கும் அதி­திக்கு அண்­மைய மகிழ்ச்சி என்­றால் அது மலை­யா­ளத்­தில் ஜெய­சூர்­யா­வு­டன் இணைந்து நடித்த ‘சூஃபியும் சுஜா­தா­வும்’ படம் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யீடு கண்­டது தானாம்.

திடீ­ரென பின்­னணி பாடுவதில் ஆர்­வம் வந்­தி­ருக்­கி­றதே? என்று கேட்­டால் நம்மை முறைக்கி­றார் அதிதி. இவ­ரது குடும்­பமே ஒரு இசைக்­ கு­டும்­பம்­தா­னாம்.

“அம்மா அரு­மை­யா­கப் பாடு­வார். அதி­கா­லை­யில் தூங்கி எழும்­போதே தம்­புரா தாலட்­டும். அதை வாசித்­துக்­கொண்டே அம்மா மனதை வரு­டும் குர­லில் பாடிக் கொண்­டி­ருப்­பார்.

“அவ­ரைப் பார்த்து நானும் சாத­கம் செய்யத் தொடங்­கி­னேன். வீட்­டில் உள்ள அனை­வ­ருக்­குமே இசை­யில் ஈடு­பாடு உண்டு.

“பள்ளி நாட்­களில் நானும் சும்மா இருந்­த­தில்லை. அதி­கா­லை­யில் எழுந்து நடன வகுப்­புக்­குப் போவேன். இப்­போது என் குரலை எல்­லோ­ரும் பாராட்­டு­கி­றார்­கள் என்­றால் அதற்கு அம்­மா­தான் கார­ணம்.

“கூடவே என்னை அறி­மு­கப்­ப­டுத்­திய ஏ.ஆர். ரகு­மான் சாருக்­கும் அதில் பங்­குண்டு,” என்று சொல்­லும் அதிதி இயற்­கை­யின் ரசி­கை­யாம்.

சிறு­வ­ய­தில் அதி­கா­லை­யில் எழுந்­தி­ருக்­கும்­போது சூரிய உத­யத்தை சில நிமி­டங்­க­ளா­வது கண்டு ரசிப்­பா­ராம். இவர் பிறந்­தது ஹைத­ரா­பாத்­தில் என்­றால் வளர்ந்­தது மும்­பை­யில்­தா­னாம்.

அதி­தி­யின் பாட்­டி­யும் தாயா­ரின் குடும்­பத்­தா­ரும் இன்­ன­மும் ஹைத­ரா­பாத்­தில்­தான் உள்­ள­னர். இவ­ரது பாட்டி ஓர் எழுத்­தா­ள­ராம். அதைப் பெரு­மை­யா­கக் குறிப்­பி­டு­கி­றார்.

மும்­பை­யில் பள்ளி, கல்­லூரி படிப்பை முடித்­த­வர் மம்­முட்­டி­யு­டன் ‘பிர­ஜா­பதி’ என்ற மலை­யா­ளப் படத்­தில் அறி­மு­க­மா­னார். ஹைத­ரா­பாத்­தில் பிறந்­தி­ருந்­தா­லும் அதி­திக்கு தெலுங்­கில் சர­ள­மா­கப் பேச வராது. ‘காற்று வெளி­யிடை’ படம்­தான் தன் வாழ்க்­கை­யில் பெரிய திருப்­பு­மு­னையை ஏற்­ப­டுத்­தி­ய­தா­கச் சொல்­கி­றார்.

மணி­ரத்­னம் அலு­வ­ல­கத்­தில் இருந்து தொலை­பேசி அழைப்பு வந்­த­தும் நேரில் சென்­றா­ராம். இரண்டு, மூன்று காட்­சி­களை விவ­ரித்து நடிக்­கு­மாறு மணி­ரத்­னம் கேட்­டுக்­கொள்ள, சிறப்­பாக நடித்­த­தால் அன்­றைய தினமே நாய­கி­யாக ஒப்­பந்­தம் செய்­துள்­ளார் மணி­ரத்­னம். அந்த நாளை வாழ்­நாள் முழு­தும் மறக்க இய­லாது என்­கி­றார்.

உண்­மை­யான காத­லில் தனக்கு நம்­பிக்கை இருப்­ப­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், அத்­த­கைய காதலை மட்­டும் மதிப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

“உண்­மை­யாக காதலிப்பவர்களால் எந்­த­வித சிர­ம­மு­மின்றி ஒரே அறை­யில் அமர்ந்து மணிக்­கணக்­கில் பேச­மு­டி­யும். மன­தைப் பகிர்ந்­து­கொள்ள முடி­யும்.

“என்­னைப் பொறுத்­த­வரை வதந்­தி­க­ளை­யும் கிசு­கி­சுக்­க­ளை­யும் கண்­டு­கொள்­வதே இல்லை. முன்­பெல்­லாம் சில கிசு­கி­சுக்­கள் மன­தைக் காயப்படுத்­தும். இப்­போது ஏதே­னும் கிசு­கி­சுக்­க­ளைக் கேள்­விப்­பட்­டால் புறக்­க­ணித்து விடு­வேன்.

“தமிழ்ச் சினி­மா­வில் மட்­டு­மல்­லா­மல் ஒட்­டு­மொத்த திரை­யு­ல­கி­லும் எப்­போது முத­லி­டத்­தைப் பிடிக்­கப் போகி­றீர்­கள் என்று சிலர் கேட்­கி­றார்­கள். அதற்கு என்­னி­டம் பதில் இல்லை.

“எனி­னும் என்­னை­யும் மதித்து இப்­ப­டி­யொரு கேள்­வி­யைக் கேட்­கத் தோன்­றி­யதே, அதற்­காக அவர்­க­ளுக்கு என் நன்றி. எனக்கு முத­லி­டம், இரண்­டாம் இடம் என்­ப­தில் எல்­லாம் பெரிய விருப்­பம் இ்ல்லை. என்­னைத் தேடி­வ­ரும் எல்லா வாய்ப்பு களுமே மகிழ்ச்சி தரு­கின்­றன. கார­ணம் என் திறமை மீது ஒரு­சி­லர் வைத்­துள்ள நம்­பிக்­கை­யின் கார­ண­மாக தேடி வரும் வாய்ப்­பு­கள் அவை.

“எனவே அவற்றை ஏற்று அக்­க­றை­யு­ட­னும் அர்ப்­ப­ணிப்­பு­ட­னும் நடித்து வரு­கி­றேன். இதுவே எனக்கு மன­நி­றை­வைத் தரு­கிறது.

“சில­ருக்கு அதிக சம்­ப­ளத்­தின் மீதும் சில­ருக்கு விரு­து­கள் மீதும் ஆர்­வம் இருக்­கும். எனக்­குப் பெரிய இயக்­கு­ந­ரின் படத்­தில் நல்ல கதை­யில் நடிப்­பதே பெரிய கௌர­வம். அது­போ­தும்,” என்று பக்குவமாகப் பேசும் அதிதி ராவ் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னால் முடிந்த சில உதவிகளைச் சத்தமின்றிச் செய்து வருவதாகத் தகவல்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon