புதுப்படம் ஒன்றில் தன் மகனுக்கே வில்லனாகப் போகிறார் விக்ரம். இப்படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. லலித் குமார் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகவும் ஸ்ரேயஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிய உள்ளனர். மகன் துருவ் விக்ரமை பெரியதொரு வெற்றிப் படத்தில் நடிக்கவைக்க வேண்டும் என்று விரும்புகிறாராம் விக்ரம். அதனால் மகனுடன் சேர்ந்து அவரும் களமிறங்க உள்ளதாகத் தகவல். மேலும் மகனுக்காக வில்லன் கதாபாத்திரத்தையும் ஏற்கப் போகிறார். இது மிக வித்தியாசமான வில்லன் வேடமாக இருக்குமாம். படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும்.
மகனுக்கு வில்லனாகிறார் விக்ரம்
1 mins read
மகன் துருவ் விக்ரமை பெரியதொரு வெற்றிப் படத்தில் நடிக்கவைக்க வேண்டும் என்று விரும்புகிறாராம் விக்ரம். படம்: ஊடகம் -

