‘கோப்ரா’வுக்காக உயிரைப் பணயம் வைத்து நடித்த விக்ரம்

கொரோனா விவகாரம் முடிவுக்கு வந்ததும் ‘கோப்ரா’ படக்குழு ரஷ்யாவில் படப்பிடிப்பு நடத்த உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகும் இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். குறிப்பிட்ட ஒரு காட்சியை நீருக்கடியில் மிக ஆபத்தான முறையில் படமாக்கி உள்ளனர். இதற்காக விக்ரம் தன் உயிரைப் பணயம் வைத்து நடித்தாராம். இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிக்குமார், சர்ஜனோ காலித் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.