ஹரிஷ்: உலகம் விடுபட வேண்டும்

இந்­தாண்டு தனது பிறந்­த­நாளை அமை­தி­யாக கடந்து சென்­றுள்­ளார் ஹரிஷ் கல்­யாண். ஜூன் 29 அவரது பிறந்த நாள்.

வழக்­க­மாக அன்­றைய தினம் நண்­பர்­க­ளு­டன் உற்­சா­க­மாக பொழுது கழி­யு­மாம். இந்­தாண்டு முற்­றி­லும் மாறு­பட்ட அனு­ப­வத்­தைப் பெற்­றி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

“எனது நண்­பர்­களில் ஒன்றிரண்டு பேருக்கு ஏப்­ரல், மே மாதங்­களில் பிறந்­த­நாள் வரும். நண்­பர்­கள் அனை­வ­ருமே யாருக்­குப் பிறந்­த­நாள் வந்­தா­லும் நன்­றா­கக் கொண்­டா­டு­வது வழக்­கம். ஆனால் கொரோனா ஊர­டங்கு கார­ண­மாக ஏப்­ரல், மே மாதங்­களில் வெளியே தலை­காட்ட முடி­ய­வில்லை,” என்­கி­றார் ஹரிஷ்.

எப்­ப­டி­யும் ஜூன் மாதம் நிலைமை இயல்பு நிலைக்­குத் திரும்­பும் என்றும் தம் பிறந்­த­நா­ளை­யா­வது நண்­பர்­களோடு சேர்ந்து கொண்­டா­டு­வோம் என்­றும் திட்­ட­மிட்­டி­ருந்­தா­ராம்.

“ஆனால் இப்­போ­தும் நிலைமை சீர­டை­ய­வில்லை. அத­னால் நானும் ஊர­டங்­குக்கு மத்­தி­யில்­தான் பிறந்­த­நாளை எதிர்­கொண்­டுள்­ளேன். வழக்­க­மாக பிறந்­த­நா­ளை­யொட்டி நண்­பர்­கள் திடீ­ரென வீட்­டுக்கு வந்து ஆச்­ச­ரி­யப்­பட வைப்­பார்­கள். இந்த முறை அப்­ப­டிச் செய்ய வேண்­டாம் என்று கூறி­விட்­டேன்.

“மாறாக, நான் நேரில் வந்து சந்­திப்­ப­தாக கூறி­யி­ருந்­தேன். எப்படியோ பிறந்­த­நாள் அன்று காலை நண்­பர்­கள் சில­ரு­டன் கைபேசி காணொளி வசதி மூலம் உரை­யாட முடிந்­தது,” என்று சொல்­லும் ஹரிஷ், பொது­வாக தமது பிறந்­த­நா­ளின்­போது ஆத­ர­வற்­ற­வர்­க­ளுக்கு உணவு அளிப்­பது வழக்­க­மாம்.

ஆண்டு முழு­வ­தும் வாய்ப்பு அமை­யும் போதெல்­லாம் இந்த நல்ல காரி­யத்­தைச் செய்­வ­துண்டு என்­றா­லும் பிறந்­த­நாளன்று உணவு அளிப்­ப­தைக் கட்­டா­ய­மாக வைத்­துள்­ளார்.

“இம்­முறை நேரில் சென்று ஆத­ர­வற்­ற­வர்­க­ளைச் சந்­திக்க முடி­ய­வில்லை. அத­னால் சில சமூக அமைப்­பு­க­ளுக்கு வங்கி மூலம் பணம் அனுப்பி உள்­ளேன். உல­கம் கொரோனா கிரு­மி­யின் பிடி­யி­லி­ருந்து வெளி­யேற வேண்­டும் என்­பதே என் விருப்­பம்,” என்­கி­றார் ஹரிஷ்.