மின் கட்டணம்: ஹுமா புலம்பல்

தங்கள் வீட்டுக்கான மின்கட்டணம் வழக்கத்தைவிட பல மடங்கு அதிகமாக இருப்பதாக திரைப் பிரபலங்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். இதனால் சாமானிய மக்கள் எந்தளவு பாதிக்கப்படுவார்கள் எனும் விவாதமும் சமூக வலைத்தளங்களில் தொடங்கி உள்ளது.

நடிகர் பிரசன்னா, நடிகைகள் கார்த்திகா, டாப்சி உள்ளிட்ட பலர் ஏற்கெனவே தங்களுக்கான மின் கட்டணம் குறித்து அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ‘காலா’ புகழ் நடிகை ஹுமா குரேஷியும் தன் பங்குக்குப் புலம்பியுள்ளார்.

“எனது வீட்டுக்கு கடந்த மாதம் வரை சுமார் 6 ஆயிரம் ரூபாய் மின்கட்டணமாக செலுத்தி வந்தேன். இந்த மாத மின்கட்டணமாக 50 ஆயிரம் ரூபாய் செலுத்தவேண்டும் என்று பில் அனுப்பப்பட்டு இருக்கிறது. மூன்று மாத ஊரடங்கு வேளையில் நான் அப்படி என்ன என் வீட்டுக்குப் புதிதாக மின்சாதனப் பொருட்கள் வாங்கினேன் என்பது தெரியவில்லை,” என்று தமது ஆச்சரியத்தையும் கோபத்தையும் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் ஹுமா குரேஷி.