'அண்ணாத்த' - பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பு இல்லை

'அண்ணாத்த' - பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பு இல்லை

1 mins read
6985326c-bd11-4c25-9553-2633b05c2905
'பேட்ட' படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் ரஜினிகாந்த், சிம்ரன். -

ரஜி­னி­காந்த் நடிப்­பில் உரு­வா­கி­வரும் 'அண்­ணாத்த' படம் அடுத்­தாண்டு பொங்­க­லுக்கு திரை­காண வாய்ப்­பில்லை என புதுத்­த­க­வல் வெளி­யாகி உள்­ளது.

மேலும், கொரோனா சூழ்நிலையைக் கருத்­தில் கொண்டு இந்­தாண்டு முழு­வ­தும் படப்­பி­டிப்பு நடத்­த­வேண்­டாம் என ரஜினி அப்­ப­டத்­தின் தயா­ரிப்­புத் தரப்­பி­டம் வலி­யு­றுத்தி உள்­ள­தாகக் கூறப்­ப­டு­கிறது.

'சிறுத்தை' சிவா இயக்­கத்­தில் ரஜி­னி­காந்த் நடிக்­கும் படம் 'அண்ணாத்த'. இந்­தாண்டு தீபாவளிக்கு இப்­ப­டம் வெளியாகும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட நிலையில் கொரோனா கிரு­மித்­தொற்றுப் பரவல் கார­ண­மாக படப்­பி­டிப்பு தடைப்­பட்­டது.

பின்­னர் கொரோனா தாக்­கம் முடி­வுக்கு வந்­த­தும் படப்­பி­டிப்பு துவங்­கும் என்­றும் அடுத்­தாண்டு பொங்­கல் தினத்­தன்று படம் வெளி­யீடு காணும் என்­றும் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில் ஆண்டு இறு­தி­வரை படப்­பி­டிப்பை நடத்­த­வேண்­டாம் என்­றும் நிலைமை சீர­டை­யும் பட்­சத்­தில் 2021ஆம் ஆண்­டின் முற்­பா­தி­யில் படப்­பி­டிப்பை நடத்தலாம் என்­றும் ரஜினி திட்­ட­வட்­ட­மா­கக் கூறி­விட்­ட­தாக தமி­ழக ஊட­கம் தெரி­வித்­துள்­ளது.

ரஜி­னி­யின் இந்த முடி­வுக்கு சன் பிக்­சர்ஸ் நிறு­வ­னத்­தார் ஒப்புக் கொண்­டுள்­ள­தாக தக­வல்.

இதேபோல் 'வலிமை' படப்­பிடிப்பை ஆண்டு இறுதி வரை ஒத்தி வைக்­கு­மாறு நடி­கர் அஜித்­தும் கேட்­டுக் கொண்­டுள்­ளா­ராம். தயா­ரிப்­பா­ளர் போனி கபூர் இதற்கு ஒப்­புக்கொண்­ட­தா­கத் தக­வல்.

சன் பிக்­சர்ஸ் தயா­ரிக்­கும் 'அண்­ணாத்­த' படத்தில் நயன்­தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிர­காஷ்­ராஜ், சதீஷ், சூரி உள்­ளிட்ட பலர் நடிக்­கின்­ற­னர். டி.இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.