ராஷி: தமிழ் கற்று வருகிறேன்

ராஷி: தமிழ் கற்று வருகிறேன்

3 mins read
99d95f1a-58b5-4787-b8f6-24f414718020
மொழி தெரிந்­தி­ருந்­தால்­தான் சில கதா­பாத்­தி­ரங்­களில் ஆத்­மார்த்­த­மாக நடிப்பை வெளிப்­ப­டுத்த முடி­யும் என்­கி­றார் ராஷி கண்ணா. படம்: ஊடகம் -

கடந்த சில வாரங்­க­ளாக இணை­யம் வழி தமிழ் கற்று வரு­கி­றா­ராம் இளம் நாயகி ராஷி கண்ணா.

இந்­தி­யா­வில் ஊர­டங்கு முடி­வுக்கு வரும்­போது தாம் நடிக்­கும் படங்­க­ளுக்­குப் பின்­னணிக் குரல் கொடுக்­கும் அள­வுக்கு தமி­ழில் சர­ள­மா­கப் பேச­மு­டி­யும் என்று நம்­பு­கி­றா­ராம்.

"பல மொழி­களில் நடித்­து­வ­ரும் நிலை­யில் ஏன் தமிழை மட்­டும் கற்­றுக்­கொள்­கி­றீர்­கள் என்று பல­ரும் கேட்­கி­றார்­கள். கார­ணம், தமி­ழில்­தான் தற்­போது அதிக படங்­களில் நடிக்­கி­றேன். கடந்த இரு மாதங்­களில் மட்­டும் தொலை­பேசி வழி­யாக பல கதை­கள் கேட்­டு­விட்­டேன். அவற்­றுள் சில­வற்­றில் நடிக்­க­வும் முடிவு செய்­துள்­ளேன்.

"எனவே, தமி­ழில் நடிக்­க­வேண்­டு­மா­னால், அம்­மொ­ழியை நன்கு தெரிந்­து­கொண்டு நடிப்­ப­து­தான் நல்­லது எனத் தோன்­றி­யது. மொழி தெரிந்­தி­ருந்­தால்­தான் சில கதா­பாத்­தி­ரங்­களில் ஆத்­மார்த்­த­மாக நடிப்பை வெளிப்­ப­டுத்த முடி­யும்," என்­கி­றார் ராஷி கண்ணா.

ஊர­டங்­கின் தொடக்­கத்­தில் அதைக் கடந்து செல்­வது எளிதாகத் தோன்­றி­யது என்று குறிப்­பி­டு­ப­வர், நாட்­க­ளின் போக்­கில் அது எவ்­வ­ளவு சிர­மம் என்­ப­தைப் படிப்­ப­டி­யாக உணர முடி­கிறது என்­கி­றார். தற்­போது வீட்டு வேலை­கள் அனைத்­தை­யும் இவ­ரே­தான் செய்­கி­றா­ராம். தவிர, உடற்­ப­யிற்சி செய்­வது, பழைய திரைப்­ப­டங்­க­ளைப் பார்ப்­பது என்று பொழுது கழி­கி­ற­தாம்.

"நேரம், காலத்­துக்கு நான் எப்­போ­துமே உரிய மரி­யாதை கொடுப்­பேன். நேரத்தை வீண­டிக்­கக்­கூ­டாது என்­ப­து­டன் அதை நல்­ல­வி­த­மா­கப் பயன்­ப­டுத்த வேண்­டும் என்­ப­தி­லும் கவ­ன­மாக இருப்­பேன். அப்­ப­டிப்­பட்ட என்னை கொரோனா வீட்­டுக்­குள் முடக்­கிப் போட்­டுள்­ளது.

"இத­னால் நீண்ட யோச­னைக்­குப் பிறகு சில முடி­வு­களை எடுத்­துச் செயல்­ப­டுத்தி வரு­கி­றேன். அதில் ஒன்­று­தான் இணை­யம் வழி­யி­லான தமிழ் வகுப்பு. எனக்­குத் தமி­ழில் எழு­தப் படிக்­கத் தெரி­யாது. அத­னால் அந்­தக் குறைக்­குத் தீர்வு கண்­டுள்­ளேன்," என்று சொல்­லும் ராஷி தற்­போது கித்­தார் வாசிப்­பது, ஆன்­மீ­கப் புத்­த­கங்­கள் படிப்­பது ஆகி­ய­வற்­றுக்கு முன்­னு­ரிமை அளிக்­கி­றா­ராம். சித்­தார்த்­து­டன் 'சைத்­தான் கே பச்சா', 'அரண்­மனை 3' ஆகிய படங்­களில் நடித்து வரு­கி­றார்.

"சித்­தார்த்­து­ட­னான படத்­தில் இன்­னும் ஒரு பாடல் காட்­சியை மட்­டுமே பட­மாக்க வேண்டி உள்­ளது. கொரோனா விவ­கா­ரம் முடி­வுக்கு வந்த கையோடு இப்­ப­டம் வெளி­யா­கும் என நம்­பு­கி­றேன். சித்­தார்த் நடிப்பு எனக்கு மிக­வும் பிடிக்­கும். அவ­ரைப் போலவே இயக்­கு­நர் கார்த்­திக்­கும் நல்ல திற­மை­சாலி. இந்­தப் படம் ரசி­கர்­க­ளுக்­குப் புது­வித அனு­ப­வத்­தைக் கொடுக்­கும்.

"அதே­போல் இயக்­கு­நர் சுந்­தர் சி. சாரின் படங்­களை ஒன்­று­வி­டா­மல் பார்த்­தி­ருக்­கி­றேன். அவ­ரது படம் என்­றால் சிரித்­துக்­கொண்டே இருக்­க­லாம். 'அரண்­மனை' படத்­தின் மூன்­றா­வது பாகத்­தில் நடிப்­பது பெரும் மகிழ்ச்­சி­யைக் கொடுத்­தி­ருக்­கிறது. அதி­லும் ஆர்­யா­வு­டன் இணைந்து நடிப்­பது கூடு­தல் சிறப்­பம்­ச­மாக உள்­ளது. மேலும் பா. விஜய் சாரு­டன் இணைந்து பணி­யாற்ற இருப்­ப­தும் எனக்கு உற்­சா­க­ம­ளித்­தி­ருக்­கிறது," என்று துள்­ள­லு­டன் சொல்­கி­றார் ராஷி கண்ணா.

தற்­போது இன்ஸ்­ட­கி­ரா­மில் இவரை 5 மில்­லி­யன் பார்­வை­யா­ளர்­கள் பின்­தொடர்­கின்­ற­னர். அவர்­களை மகிழ்­விக்­கும் வகை­யில் தொடர்ந்து காணொ­ளிப் பதி­வு­கள், புகைப்­ப­டங்­கள், சமூ­கக் கருத்­துக்­கள் ஆகி­ய­வற்­றைப் பதி­விட்டு வரு­கி­றா­ராம். தமி­ழில் தமக்கு இவ்­வ­ளவு ரசி­கர்­கள் இருப்­பார்­கள் என்று கன­வி­லும் நினைத்­துப் பார்த்­த­தில்லை என்று சொல்­லும் ராஷி, தான் இது­வரை நான்கு தமிழ்ப் படங்­களில் மட்­டுமே நடித்­தி­ருப்­ப­தா­கச் சுட்­டிக் காட்­டு­கி­றார்.

"தமிழ் ரசி­கர்­க­ளின் இந்­தக் குறை­வில்­லாத அன்­புக்­கா­கவே மேலும் பல தமிழ்ப் படங்­களில் நடிக்­க­வேண்­டும் எனும் விருப்­பம் என் மன­தில் நாளுக்கு நாள் அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளது. சமூக வலைத்­த­ளங்­களில் ஆயி­ரக்­க­ணக்­கான தமிழ் ரசி­கர்­கள் என்­மீது அன்­பைப் பொழி­கி­றார்­கள். பொது இடங்­க­ளுக்­குச் செல்­லும்­போது என்­னைப் பாசத்­து­டன் பெயர் சொல்லி அழைப்­பது, கூட்­ட­மாக புகைப்­ப­டம் எடுத்­துக்­கொள்­வது என்று அவர்­கள் அன்பை வெளிப்­ப­டுத்­தும் விதத்­தைப் பார்க்­கும்­போது நான் ஆசிர்­வ­திக்­கப்­பட்ட பெண்­ணாக உணர்­கி­றேன். இந்த அன்­புக்­காக ரசி­கர்­க­ளுக்கு நன்றி," என்­கி­றார் ராஷி கண்ணா.