ஆன்மீக வழியில் செல்லும் சஞ்சிதா

அண்மைக் காலமாக ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டும் சினிமா கலைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நடிகை சஞ்சிதாவும் ஆன்மீகம் மற்றும் தியானத்தில் மூழ்கி உள்ளாராம்.

தற்போது இயற்கையுடன் வாழும் உத்திகளைக் கற்று வருவதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“யோகாசனம், தியானம் ஆகிய இரண்டும் வாழ்க்கையில் நம்மை மேம்படச் செய்யும். அதனால் எனக்குத் தெரிந்த பலருக்கு தியான முறைகள் குறித்து வாய்ப்பு கிடைக்கும் போது விவரிக்கிறேன்.

“சினிமா, விருந்து நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்காமல் தத்துவ நூல்கள் படிக்க நேரம் ஒதுக்குகிறேன்,” என்கிறார் சஞ்சிதா ஷெட்டி.

இனி தனது திறமைக்கேற்ற நல்ல கதாபாத்திரங்கள் அமையும்போது மட்டுமே திரைப்படங்களில் நடிப்பாராம்.