மகனை கொஞ்சும் கீர்த்தி

மகனை கொஞ்சும் கீர்த்தி

3 mins read
d6af99c6-a7ba-4c5a-b3d0-5c1be2b9100a
கற்­ப­னை­யாக எழுப்­பப்­படும் கேள்­வி­க­ளுக்கு விளக்­கம் அளித்து எந்­த­வி­த­மான பல­னும் இல்லை என்­கி­றார் கீர்த்தி சுரே‌ஷ். படம்: ஊடகம் -

'பெண்­கு­யின்' படம் இணை­யத்­தில் வெளியிடப்­பட்­டது சரி­யான முடி­வு­தான் என்­கி­றார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இணை­யத்­தில் வெளி­யா­ன­தால் மேலும் பர­வ­லான ரசி­கர்­க­ளி­டம் இந்­தப் படம் தன்­னைக் கொண்டு சேர்த்­தி­ருப்­ப­தாக அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

நடி­கர் விஜய்க்கு இவர் இசை வாழ்த்து தெரி­வித்­த­தைப் பல­ரும் பாராட்டி உள்­ள­னர்.

கீர்த்­திக்கு வய­லின் வாசிக்­கத் தெரி­யும் என்­பதே அந்த வாழ்த்­தின் மூலம்­தான் பல­ருக்­கும் தெரிய வந்­துள்­ள­தாம்.

'மாஸ்­டர்' படத்­தில் இடம்­பெற்ற 'குட்டி ஸ்டோரி' பாடலை வய­லி­னில் வாசித்து விஜய்க்கு அண்­மை­யில் பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­தி­ருந்­தார் கீர்த்தி.

"பள்­ளி­யில் படிக்­கும்­போது வய­லின் வாசிக்க கற்­றுக்­கொண்­டேன். அப்­போ­தெல்­லாம் தொடர்ந்து வய­லின் வகுப்­புக்­குச் செல்­வ­துண்டு.

"அடிப்­படை விஷ­யங்­க­ளைக் கற்­றுக்­கொண்ட பிறகு வய­லின் வகுப்­பு­க­ளைத் தொடர முடி­ய­வில்லை.

"நேரம் கிடைக்­கும்­போது எடுத்து வாசித்­தேன். ஒரு கட்­டத்­தில் படங்­களில் அடுத்­த­டுத்து நடிக்­கத் தொடங்­கி­ய­தும் வய­லினை தொட முடி­ய­வில்லை.

"இந்த ஊர­டங்கு நேரத்­தில்­தான் பல விஷயங்­ க­ளைச் செய்­வ­தற்­கான நேரம் கிடைத்­துள்­ளது. அதில் வய­லின் வாசிப்­ப­தும் முக்­கி­ய­மான ஒன்று," என்­கி­றார் கீர்த்தி சுரேஷ்.

அண்­மைய சில தினங்­க­ளாக சமை­ய­ல­றை­யில்­தான் இவர் அதிக நேரத்­தைச் செல­வி­டு­கி­றா­ராம். அதன்­பி­றகு தனது செல்ல மகனை (செல்ல நாய்க்­குட்­டியைத்­தான் இப்­ப­டி குறிப்­பி­டு­கி­றார்) கொஞ்­சு­வதற்கு அதிக நேரம் ஒதுக்­கு­கி­றா­ராம்.

"என் மக­னும் அன்பை அள்­ளிக் கொட்­டு­கி­றான். சமைப்­பது, மக­னு­டன் விளை­யா­டு­வது என்று நேரம் போகிறது. 'நடி­கை­யர் தில­கம்' படத்­துக்­குப் பிறகு நிறைய கதை­கள் கேட்­டி­ருக்­கி­றேன். இதற்கே ஆறரை மாதங்­கள் போய்­விட்­டன.

"எனி­னும் ஊர­டங்­கால் உடற்­ப­யிற்சி செய்­வ­தற்கு நிறைய நேரம் கிடைத்­தது. அதன் பல­னாக நன்கு இளைத்­து­ள்ளேன். உடனே புதுப்­ப­டத்­துக்­காக எனது தோற்­றத்தை மாற்­றிக்­கொண்­ட­தாக சிலர் நினைத்து விட்­ட­னர்.

"பெண்­களை மையப்­ப­டுத்­தும் கதை­யில் நடிக்­க­வேண்­டும் என்று முடி­வெ­டுத்­தி­ருந்த நிலை­யில்­தான் 'பெண்­கு­யின்' பட வாய்ப்பு கிடைத்­தது. அத­னால் ஒப்­புக்­கொண்­டேன்," என்று சொல்­ப­வர், அடுத்து மலை­யா­ளத்­தில் நடித்­துள்ள 'மரக்­கார் - அர­பிக்­க­ட­லிண்டே சிம்­ஹம்' படத்­தின் வெளி­யீட்டை ஆவ­லு­டன் எதிர்­பார்க்­கி­றா­ராம்.

இவ­ரைக் கதா­நா­ய­கி­யாக அறி­மு­கப்­ப­டுத்­திய பிரி­ய­தர்­ஷன் இயக்­கி­யுள்ள படம் இது. வர­லாற்­றுப் பின்­ன­ணி­யில் உரு­வாகி இருக்­கும் இப்­ப­டம் மலை­யா­ளத் திரை­யு­ல­குக்­குப் பெருமை சேர்க்­கும் படைப்­பாக இருக்­கும் என்­கி­றார் கீர்த்தி சுரேஷ்.

"இந்த ஊர­டங்கு இல்­லை­யென்­றால் என் நடிப்­பில் சில படங்­கள் இந்­நே­ரம் வெளி­யா­கி­ ­இருந்­தி­ருக்­கும். ஆனால், சில விஷ­யங்­களை நம்­மால் தீர்­மா­னிக்க முடி­யாது.

"இந்­தக் கட்­டாய ஓய்­வும் விடு­மு­றை­யும் இயற்கை நமக்கு வைக்­கும் தேர்வு போன்றே இருக்­கிறது. எதிர்­பா­ராத சூழலை எப்­படி சமா­ளிக்க வேண்­டும்? எப்­படி எதிர்­கொண்டு வெற்றி பெறவேண்­டும் என்­பதை நாம் கற்று வரு­கி­றோம்.

"இந்த ஊர­டங்­கால் சில நன்­மை­களும் விளைந்­தி­ருப்­பதை மறுக்க முடி­யாது. அனைவரும் இதி­லி­ருந்து பாடம் கற்­றுக்­கொண்டு வருங்­கா­லத்­தில் கவ­ன­மா­கச் செயல்­பட வேண்­டும்," என்று சொல்­லும் கீர்த்தி, தமி­ழில் தற்­போது ரஜி­னி­யின் 'அண்­ணாத்த' படத்­தில் நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்.

பிர­பல தொழி­ல­தி­ப­ரின் மக­னுக்­கும் இவ­ருக்­கும் திரு­ம­ணம் என்று வெளி­யான தக­வல் முற்­றி­லும் பொய் என்று ஏற்­கெ­னவே மறுத்­தி­ருப்­ப­வர், அண்­மைக்­கா­ல­மாக இது தொடர்­பாக எழுப்­பப்­படும் கேள்­வி­க­ளைக் கண்டு கொள்­வ­தாக இல்லை.

கற்­ப­னை­யாக எழுப்­பப்­படும் கேள்­வி­க­ளுக்கு விளக்­கம் அளித்து எந்­த­வி­த­மான பல­னும் இல்லை என்­கி­றார்.

"என்­னைப் பொறுத்­த­வரை தற்­போது நான் உண்டு, எனது திரைப்­ப­டப் பணி­கள் உண்டு என்று வேலை­யில் முழுக்­க­வ­னம் செலுத்தி வரு­கி­றேன். என் பெற்­றோர் பக்­க­ப­ல­மாக இருப்­ப­தால் எந்­த­வி­த­மான சிக்­க­லும் இல்­லா­மல் வாழ்க்கை அமை­தி­யா­கப் போய்க்கொண்­டி­ருக்­கிறது," என்­கி­றார் கீர்த்தி.

ஊர­டங்­கைப் பயன்­ப­டுத்தி நண்­பர்­கள், உற­வி­னர்­கள் என்று பல­ரை­யும் தொடர்புகொண்டு பேசி வரு­வ­தா­கச் சொல்­ப­வர், இயல்பு நிலை திரும்­பி­ய­தும் அவர்­களில் பலரை நேரில் சந்­திக்க திட்­ட­மிட்­டுள்­ளா­ராம்.

அந்­நாளை ஆவ­லு­டன் எதிர்­நோக்கி காத்திருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.