திரைத் துளிகள் 7-7-2020

இணையத்தில் வெளியாகிறது ‘டெடி’

ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘டெடி’. ‘டிக் டிக் டிக்’ சௌந்தர்ராஜன் இப்படத்தை இயக்குகிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக அவர் மனைவி சாயிஷா நடிக்க சதீஷ், கருணாகரன், சாக்‌ஷி அகர்வால், இயக்குநர் மகிழ்திருமேனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

டி. இமான் இசையமைக்கிறார். இது நகைச்சுவை கலந்த திகில் படமாக உருவாகி வருகிறதாம். ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தை மிக விரைவில் இணையத்தில் நேரடியாக வெளியிட தயாரிப்புத் தரப்பு முடிவு செய்திருப்பதாகத் தகவல்.


சிம்பு பாடிய ‘சூப்பர் ஸ்டார்’ பாடல்

‘மாநாடு’, ‘மகா’ உள்ளிட்ட படங்களில் நடித்தபடியே சில படங்களில் பாடியும் வருகிறார் சிம்பு. அந்த வகையில் ‘ஃபிரெண்ட்ஷிப்’ படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் படம் இது. ‘பிக்பாஸ்’ புகழ் லாஸ்லியா அவருக்கு ஜோடியாகவும் வில்லன் வேடத்தில் நடிகர் அர்ஜுனும் நடிக்கின்றனர். நகைச்சுவைப் பகுதிக்காக சதீஷ் இணைந்துள்ளார்.

அண்மையில் வெளியான இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது முதல் பாடலை வெளியிட்டுள்ளனர்.

‘சூப்பர் ஸ்டார் ஆன்தம்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இப்பாடலை சிம்பு பாடியுள்ளார். உதயகுமார் இசையமைத்துள்ளார்.

இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் இப்பாடலைப் பகிர்ந்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!