திரைத் துளிகள் 7-7-2020

திரைத் துளிகள் 7-7-2020

1 mins read
7ac1df98-1a23-47dc-af8f-42375dd85eb6
'டெடி'. 'டிக் டிக் டிக்' ஆர்யாவுக்கு ஜோடியாக அவர் மனைவி சாயிஷா நடிக்கிறார். படம்: ஊடகம் -
multi-img1 of 2

இணையத்தில் வெளியாகிறது 'டெடி'

ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் 'டெடி'. 'டிக் டிக் டிக்' சௌந்தர்ராஜன் இப்படத்தை இயக்குகிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக அவர் மனைவி சாயிஷா நடிக்க சதீஷ், கருணாகரன், சாக்‌ஷி அகர்வால், இயக்குநர் மகிழ்திருமேனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

டி. இமான் இசையமைக்கிறார். இது நகைச்சுவை கலந்த திகில் படமாக உருவாகி வருகிறதாம். ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தை மிக விரைவில் இணையத்தில் நேரடியாக வெளியிட தயாரிப்புத் தரப்பு முடிவு செய்திருப்பதாகத் தகவல்.

சிம்பு பாடிய 'சூப்பர் ஸ்டார்' பாடல்

'மாநாடு', 'மகா' உள்ளிட்ட படங்களில் நடித்தபடியே சில படங்களில் பாடியும் வருகிறார் சிம்பு. அந்த வகையில் 'ஃபிரெண்ட்ஷிப்' படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் படம் இது. 'பிக்பாஸ்' புகழ் லாஸ்லியா அவருக்கு ஜோடியாகவும் வில்லன் வேடத்தில் நடிகர் அர்ஜுனும் நடிக்கின்றனர். நகைச்சுவைப் பகுதிக்காக சதீஷ் இணைந்துள்ளார்.

அண்மையில் வெளியான இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது முதல் பாடலை வெளியிட்டுள்ளனர்.

'சூப்பர் ஸ்டார் ஆன்தம்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இப்பாடலை சிம்பு பாடியுள்ளார். உதயகுமார் இசையமைத்துள்ளார்.

இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் இப்பாடலைப் பகிர்ந்து வருகின்றனர்.