விஜய் யேசுதாஸ்: பாட்டும் வேண்டும்; நடிப்பும் வேண்டும்

பாட­கர், நடி­கர் என இரு தளங்­க­ளி­லும் வெற்­றி­க­ர­மா­கப் பய­ணம் செய்ய முடி­கிறது என்­கி­றார் விஜய் யேசு­தாஸ்.

பாட­க­ராக வெற்றி பெற்ற பிற­கு­தான் நடிக்­க­வேண்­டும் என்று தந்தை யேசு­தாஸ் கண்­டிப்­பு­டன் கூறி­விட்­ட­தால் தற்­போது 41 வய­தா­கும் நிலை­யில், சில ஆண்­டு­க­ளுக்கு முன்­பு­தான் நடி­க­ராக முடிந்­தது என அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

“என் தாத்தா நாடக நடி­கர், தந்தை பாட­கர் என்­ப­து­தான் நான் பாட­க­ரா­கக் கார­ணமா என்­பது தெரி­ய­வில்லை. எப்­ப­டியோ நடி­கர், பாட­கர் என இரண்­டி­லும் கவ­னம் செலுத்தி வரு­கி­றேன்.

“எஸ்.பி.பி. சரண், வெங்­கட்­பி­ரபு உள்­ளிட்ட பல திரை­யு­லக வாரி­சு­கள் என் நட்பு வட்­டத்­தில் உள்­ள­னர்.

“அவர்­கள் சினி­மா­வில் நடிக்­கத் துவங்­கி­ய­போதே என்­னை­யும் நடிக்க அழைத்­த­னர். மலை­யாள இயக்­கு­நர் பாசில் சார் கூட ஒரு படத்­தில் நடிக்­கக் கேட்­டார். ஆனால், வீட்­டில் அதற்கு அனு­மதி கிடைக்­க­வில்லை,” என்­கி­றார் விஜய் யேசு­தாஸ்.

படிப்பை முடிக்­க­வேண்­டும், பாட­க­ராக வெற்றி பெற­வேண்­டும் என்று குடும்­பத்­தார் திட்­ட­வட்­ட­மா­கக் கூறி­ய­தால் பாட­க­ரா­வ­தில் கவ­னம் செலுத்­திய விஜய், அதுவே தமக்குப் பல­மா­க­வும் பல­வீ­ன­மா­க­வும் அமைந்­து­விட்­டது என்­கி­றார்.

“எனக்கு இப்­போது 41 வய­தா­கிறது. பாட­க­னாகப் பர­வ­லாக அறி­மு­க­மாகி இருக்­கி­றேன்.

“அதே­ச­ம­யம் 20 வரு­டங்­க­ளுக்கு முன்பு நான் நடிக்க விரும்­பிய கதா­பாத்­தி­ரங்­களை இப்­போது ஏற்க இய­லாது. அத­னால் வய­துக்­குத் தகுந்த வேடங்­க­ளாக நடிப்­பைத் தொடர்­கி­றேன்,” என்று சொல்­லும் விஜய் யேசு­தாஸ் கதா­நா­ய­கனாகத்­தான் நடிப்­பேன் என்­றெல்­லாம் நிபந்­தனை விதிப்­ப­தில்லை.

தனு­சு­டன் ‘மாரி’ படத்­தில் நடித்து முடித்­த­வர், அடுத்து ‘படை­வீ­ரன்’ படத்­தில் நாய­க­னாக நடித்­துள்­ளார்.

“சில மாதங்­க­ளுக்கு முன்பு ‘படை­வீ­ரன்’ படத்­துக்­கான சிறப்­புக் காட்­சிக்கு வருகை தந்த தனுஷ், என் நடிப்பை வெகு­வா­கப் பாராட்­டி­னார். ‘நடிப்பு நன்­றாக இருக்­கிறது. ‘மாரி’யிலும் இதே­போல் நடித்­தி­ருக்­க­லாமே’ என்று நகைச்­சு­வை­யா­கக் கூறி­னார். மலை­யாளத் திரை­யு­ல­கைச் சேர்ந்­த­வர்­களும் என் நடிப்­பைப் பாராட்­டி­னர்,” என்று சொல்­லும் விஜய் யேசு­தாஸ், தற்­போது முப்­ப­ரி­மா­ணப் படம் ஒன்­றில் நடித்து வரு­கி­றார்.

இப்­ப­டம் தமிழ், இந்தி, மலை­யா­ளம், கன்­ன­டம் பஞ்­சாபி என பல்­வேறு மொழி­களில் வெளி­யாக இருக்­கி­ற­தாம். முதன்­மு­றை­யாக முப்­ப­ரி­மாண தொழில்­நுட்­பத்­தில் நடித்­தி­ருப்­ப­தால் மற்­ற­வர்­க­ளைப் போலவே தனக்­கும் அப்­ப­டத்­தைத் திரை­யில் காண ஆர்­வ­மாக இருக்­கிறது என்­கி­றார். ஒரு­வ­கை­யில் இது தமது கன­வுப்­ப­டம் என்­றும் குறிப்­பி­டு­கி­றார்.

விஜய் யேசு­தாஸ் பாடி­யுள்ள பல பாடல்­கள் ரசி­கர்­கள் மத்­தி­யில் வர­வேற்­பைப் பெற்­றுள்­ளன. குறிப்­பாக, தாம் பாடிய மெல்­லி­சைப் பாடல்­கள் ரசி­கர்­களை வெகு­வா­கக் கவர்ந்­துள்­ளன என்­கி­றார்.

“கூடு­மான வரை வெவ்­வேறு வித­மான பாடல்­களையே பாட முயற்­சிக்­கி­றேன். யுவன் சங்­கர் ராஜா இசை­யில் பாடிய பல பாடல்­கள் வெற்றி பெற்­றி­ருக்­கின்­றன. ‘சண்­டக்­கோழி’யில் இடம்­பெற்ற ‘தாவணி போட்ட’, ‘தீபா­வளி’ படத்­தில் ‘காதல் வைத்து காதல் வைத்து’ உள்­ளிட்ட பாடல்­கள் என்­னை­யும் வெகு­வா­கக் கவர்ந்­தவை.

“ஒரு பாட­க­ராக எனக்­குப் பிடிக்­காத விஷ­யம் என்­றால், பேச ஆரம்­பித்­த­துமே இரண்டு வரி பாடிக் காட்­டுங்­கள் என்று கேட்­ப­து­தான். ஆனால், அவை­யெல்­லாம் கடந்து இப்­போது பக்­கு­வ­மாகி விட்­டேன்.

“பாட­க­ரி­டம் மட்­டும்­தான் பாடச் சொல்­லிக் கேட்­ப­வர்­கள், நடி­கர்­க­ளி­டம் மட்­டும் பெரும்­பா­லும் நடிக்­கச் சொல்­லிக் கேட்­ப­தில்லை,” என்று சொல்­லும் விஜய், தொடர்ந்து நடி­க­ரா­க­வும் பாட­க­ரா­க­வும் வெற்றி நடை போட விரும்­பு­கி­றா­ராம். ரசி­கர்­க­ளின் மன­தில் தனக்­கென ஓர் இடம் பிடிக்­க­வேண்­டும் என்­பதே தமது இலக்கு என்­றும் சொல்­கி­றார்.

“ஒரு பாட­க­ராக ரசி­கர்­க­ளைத் திருப்­திப்­ப­டுத்த வேண்­டும் என்­பதே எனது லட்­சி­யம். ஒரு நிகழ்ச்­சிக்கு ஐநூறு பேர் வந்­தா­லும் நம் கண்­ணெ­திரே பத்­தா­யி­ரம் பேர் இருந்­தா­லும் அவர்­க­ளின் ரச­னைக்கு ஏற்ப நன்­றா­க­வும் நம் மன­சாட்­சிக்கு ஏற்ப உண்­மை­யா­க­வும் பாட­வேண்­டும். நாம் பாடி­யது பிடித்­துப்­போய் ஐம்­பது பேர் கேட்­டாலே, கைதட்­டி­னாலே போதும்,” என்­கி­றார் விஜய் யேசு­தாஸ்.