காஜல்: சவால்களை விரும்புகிறேன்

காஜல்: சவால்களை விரும்புகிறேன்

2 mins read
941e8d1c-cf4a-4c12-b9c8-1527afa16c43
கடி­ன­மான வேலை என்­றால் பயப்­பட மாட்­டேன். அதே­போல் திடீர் பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­ளும்­போது ஓடி ஒளி­யும் பழக்­க­மும் எனக்­கில்லை என்கிறார் காஜல் அகர்வால். படம்: ஊடகம். -

நம்­மால் எதை­யும் சாதிக்க முடி­யாது என்று நினைத்­தால் அதுவே நமது பல­வீ­ன­மா­கி­வி­டும் என்­கி­றார் காஜல் அகர்­வால்.

சவால்­கள் என்­றால் தமக்கு மிக­வும் பிடிக்­கும் என்­றும் அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

வாழ்க்­கை­யி­லும் சினி­மா­வி­லும் தாம் இது­வரை பல்­வேறு சவால்­களை எதிர்­கொண்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­துள்ள அவர், அந்­தச் சவால்­க­ளைத் தைரி­ய­மாக சந்­தித்­த­தா­கச் சொல்­கி­றார்.

"கடி­ன­மான வேலை என்­றால் பயப்­பட மாட்­டேன். அதே­போல் திடீர் பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­ளும்­போது ஓடி ஒளி­யும் பழக்­க­மும் எனக்­கில்லை.

"இது­வரை நான் நடித்த பல படங்­களில் என் திற­மைக்­குச் சவால் விடும் வகை­யி­லான கதா­பாத்­தி­ரங்­கள் அமைந்­தன. அவற்­றைக் கண்டு நான் மிர­ள­வில்லை. கார­ணம் அப்­ப­டிப்­பட்ட வாய்ப்­பு­க­ளைப் பெற­வேண்­டும் என்­பதே எனது விருப்­ப­மாக இருந்­தது," என்­கி­றார் காஜல்.

தொழில் ரீதி­யி­லான சில பிரச்­சி­னை­க­ளைத் தாமும் கடந்த காலங்­களில் சந்­தித்­தி­ருப்­ப­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், அந்த சவால்­களில் வெற்றி பெற்ற பிறகு அனைத்­தும் இனி­மை­யான நினை­வு­க­ளாக மாறி­விட்­டன என்­கி­றார்.

அஜித்­து­டன் நடித்த 'விவே­கம்' படத்­துக்­கான படப்­பி­டிப்பு வெளி­நாட்­டில் மைனஸ் 12 டிகிரி குளி­ரில் நடை­பெற்­ற­தாம். கடுங்­கு­ளி­ரை­யும் பொருட்­ப­டுத்­தா­மல் சேலை அணிந்து நடித்­தா­ராம் காஜல்.

எனி­னும் தன்­னைத் திரை­யில் கண்ட ரசி­கர்­கள் கைதட்டி பாராட்­டி­ய­தைக் கண்­ட­போது தாம் பட்ட சிர­மங்­கள் மறந்து போன­தா­கச் சொல்­கி­றார். நம்­மால் எதை­யும் சாதிக்க முடி­யும் என்று நினைத்­தால் போதும், அதுவே நம் பல­மா­கி­வி­டும்.

"அதே­போல் பிரச்­சி­னை­க­ளைக் கண்டு பயப்­ப­டு­வதோ, ஓடி ஒளி­வதோ நல்ல தீர்­வல்ல. பெண்­கள் இதை மன­திற்­கொள்ள வேண்­ டும்," என்­கி­றார் காஜல்.

தமி­ழில் தற்­போது 'இந்­தி­யன் 2' படத்­தில் நடித்து வரும் காஜல், 'பாரிஸ் பாரிஸ்' படத்­தின் வெளி­யீட்­டிற்­காக மிகுந்த ஆவ­லு­டன் காத்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.