'கருப்பன் காளை சார்பாக' சூரியின் பரிசு

'கருப்பன் காளை சார்பாக' சூரியின் பரிசு

1 mins read
922a8880-1212-443c-b38d-39f554f654a7
நாற்பதுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வாங்கிக் குவித்துள்ளதாம். படம்: ஊடகம் -

ஜல்லிக்கட்டு காளை வளர்க்கிறார் நடிகர் சூரி.

ஊரடங்கு நேரத்தில் சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் கிராமத்துக்குச் சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார் அவர்.

இவர் வளர்க்கும் காளையின் பெயர் கருப்பன்.

இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வாங்கிக் குவித்துள்ளதாம் அந்தக் காளை.

இந்நிலையில், "ஊரடங்குக்கு நடுவுல, ஊரே அடங்கி நிக்கும்... எங்க 'கருப்பன்' நடந்து போனா!!" என்ற வாசகத்துடன் தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் கருப்பனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சூரி.

கருப்பன் பெறும் பரிசுகளை எல்லாம் அதைப் பராமரிப்பவர்களுக்கும் ஊரில் நடக்கும் காதுகுத்து, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளின்போது சம்பந்தப்பட்டவர்களுக்கும் 'கருப்பன் காளை சார்பாக' என்று குறிப்பிட்டு பரிசளித்து விடுவாராம்.

குறிப்புச் சொற்கள்
காளைஜல்லிக்கட்டு

தொடர்புடைய செய்திகள்