சிக்க விரும்பாத சேதுபதி

பள்ளி, கல்­லூ­ரி­யில் படித்­த­போது யாரி­ட­மும் தாம் அதி­கம் பேசி­ய­தில்லை என்­றும் தமக்கு கூச்ச சுபா­வம் அதி­கம் என்­றும் சொல்­கி­றார் விஜய் சேது­பதி.

‘96’ திரைப்­ப­டம் பெரி­ய­ள­வில் வெற்றி பெறும் என்று தாம் எதிர்­பார்க்­க­வில்லை என்­றும் அண்­மைய பேட்டி ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

உச்ச நட்­சத்­தி­ரம் அல்­லது பெரிய கதா­நா­ய­கன் எனும் பிம்­பத்­துக்­குள் தாம் சிக்க விரும்­ப­வில்லை என்­றும் அது பெரிய சிறைச்­சா­லை­யைப் போன்­றது என்­றும் சேது­பதி தெரி­வித்­துள்­ளார்.

“23 வயது வரை­யில் நானும் ‘96’ படத்­தில் வரும் ராம் கதா­பாத்­தி­ரம் போன்­று­தான் இருந்­தேன். மாண­வர், மாண­வி­யர் இணைந்து படிக்­கும் பள்ளி, கல்­லூ­ரி­யில்­தான் படித்­தேன். கூச்ச சுபா­வம் உள்ள எனக்­குள் அந்த ராம் கதா­பாத்­தி­ரம் இருந்­தது. ‘96’ இயக்­கு­நர் அதைத் தொட்­ட­தால்­தான் அந்­தப் படத்­தில் நடிக்க முடிந்­தது.

“ஆனால் படம் இந்த அள­வுக்கு வெற்­றி­பெ­றும் என்­றெல்­லாம் எதிர்­பார்க்­க­வில்லை. சுமா­ரா­கப் போகும் என்­று­தான் நினைத்­தேன். மேலோட்­ட­மா­கப் பார்த்­தால் அந்­தப் படம் பிடிக்­காது. அந்­தக் கதைக்­குள் சென்று உணர வேண்­டும்.

“இயக்­கு­நர் பிரேம் குமார் கதையை விவ­ரித்த உடனே, ‘இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பு இந்­தக் கதை வந்­தி­ருந்­தால் சொதப்பி இருப்­பேன். இப்­போ­து­தான் சரி­யா­கப் பண்ண முடி­யும் என நினைக்­கி­றேன்’ என்­று­தான் சொன்­னேன். ஒரு­வேளை இப்­போது படம் பார்த்­தால் கொஞ்­சம் சொதப்பி இருப்­ப­தாக தோன்­றக்­கூ­டும்,” என்று விஜய் சேது­பதி கூறி­யுள்­ளார்.

கதா­நா­ய­க­னாக வள­ரும் வரை சென்­னை­யில் தாம் வசித்த தெரு­வில் யாருக்­குமே தெரி­யாத ஒரு­வ­ரா­கத்­தான் சுற்­றிக் கொண்­டி­ருந்­த­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், இதன் கார­ண­மா­கவே கதா­நா­ய­கன் எனும் பிம்­பத்­துக்­குள் சிக்க விரும்­ப­வில்லை என்­றும் அவ்­வாறு சிக்­கி­னால் வெளியே வரவே முடி­யாது என்­றும் கூறி­யுள்­ளார்.

கோடம்­பாக்­கத்­தில் முன்­னணி நடி­க­ராக உரு­வெ­டுத்து வந்த வேளை­யில் திடீ­ரென ‘ஆரஞ்சு மிட்­டாய்’ படத்­தில் முதி­ய­வர் வேடத்­தில் நடித்­தது குறித்­தும் இப்­பேட்­டி­யில் விவ­ரித்­துள்­ளார் சேது­பதி.

அதில் நடிக்க வேண்­டிய ஒரு­வர் கடைசி நேரத்­தில் கைவி­ரித்­து­விட்­டா­ராம். தனது நண்­பர் முத­லீடு செய்­துள்ள படம் என்­ப­தால் அவ­ருக்கு உதவ முன்­வந்­தா­ராம் சேது­பதி.

“அந்­தப் படத்­துக்கு நான்­தான் வச­னம் எழு­தி­னேன். மேலும், இயக்­கு­ந­ரு­டன் இணைந்து திரைக்­கதை வேறு அமைத்­தி­ருந்­தேன். அந்­தக் கதை பற்றி முழு­மை­யா­கத் தெரி­யும் என்­ப­தால், இறு­தி­யில் இயக்­கு­ந­ரி­டம் சில யோச­னை­க­ளைத் தெரி­வித்­தேன். எனக்கு ஒப்­பனை போட்­டுப் பார்க்­க­லாம். சரி­யாக இருந்­தால் படத்தை தொட­ர­லாம் என்று திட்­ட­மிட்­டோம். ஒப்­ப­னைக்­குப் பிறகு எனது தோற்­றம் அனை­வ­ருக்­குமே பிடித்­தி­ருந்­தது. அத­னால் நடித்­தேன்,” என்­கி­றார் விஜய் சேது­பதி.

நடி­கர்­கள் ரஜினி, சிரஞ்­சீவி இரு­வ­ருமே ரசி­கர்­களை சுமார் 40 ஆண்­டு­க­ளாக கட்­டிப்­போட்டு வைத்­தி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், இரு­வ­ரும் எப்­படி வேலை செய்­கி­றார்­கள், நடிக்­கி­றார்­கள் என்­பதை எல்­லாம் நேரில் பார்த்து கற்க வேண்­டும் என்­ப­தற்­கா­கவே இணைந்து நடித்­தா­ராம்.

“ரஜினி சார் மிக­வும் சுறு­சு­றுப்­பாக இருப்­பார். நாம் என்ன செய்­யப் போகி­றோம், அது திரை­யில் என்­ன­வாக வரப்­போ­கிறது, ரசி­கர்­கள் எப்­படி எடுத்­துக் கொள்­வார்­கள் என்­பது வரை தெரிந்து வைத்­தி­ருப்­பார்.

“அவ­ரி­டம் சுமா­ரான காட்­சி­யைக் கொடுத்­தால்கூட பிர­மா­தப்­ப­டுத்தி விடு­வார்.

“அது மிக­வும் ஆச்­ச­ரி­ய­மான விஷ­யம்,” என்று தெரி­வித்­துள்ள சேது­பதி, திரை­யில் தன்னை முன்­னி­றுத்­திக் கொள்வதில் ரஜி­னி­தான் எங்­கள் அனைவருக்­குமே ‘மாஸ்­டர்’ என்று குறிப்­பிட்­டுள்­ளார். இப்­பேட்டி வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!