தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரம்யா: பிக்பாஸுக்கு இன்னும் அழைப்பு வரவில்லை

1 mins read
1edc39fc-b2e8-4736-8aff-146b28ffbbf9
நடிகை ரம்யா பாண்டியன் -

'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் தாம் பங்கேற்க இருப்பதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என நடிகை ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் இவரை ஏராளமானோர் பின்தொடர்கின்றனர். இதனால் பிரபலமடைந்துள்ள இவருக்கு 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க அழைப்பு வந்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் யாரும் தம்மை தொடர்பு கொள்ளவில்லை என ரம்யா விளக்கம் அளித்துள்ளார்.

"அவர்கள் சார்பாக (பிக்பாஸ் தரப்பு) யாரேனும் தொடர்புகொண்டால்தானே போக முடியும்? இதுவரை யாரும் என்னிடம் பேசவில்லை," என இணைய உரையாடலின்போது ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார் ரம்யா.

கடந்த ஆண்டிலேயே 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவதாக இவர் கூறியிருந்தார்.