புற்றுநோயை வென்ற இயக்குநர் குறிப்பிடும் யதார்த்தம்

கடந்த சில மாதங்­களில் எல்­லோ­ரை­யும் விட பெரி­யது எது என்­பதை இயற்கை தெளி­வாக நடத்­திக் காட்டி விட்­டது என்­கி­றார் இயக்­கு­நர் ரமணா.

இது அனை­வ­ருக்கும் நல்­ல­தொரு பாடம் என்­றும் கூறு­கி­றார்.

விஜய் நடிப்­பில் ‘திரு­மலை’, ‘ஆதி’, தனுஷ் நடிப்­பில் ‘சுள்­ளான்’ ஆகிய வெற்­றிப் படங்­களை இயக்­கிய ரமணா சில ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் கடும் புற்­று­நோ­யால் தாக்­கப்­பட்டு, தன்­னம்­பிக்­கை­யு­டன் போராடி அதி­லி­ருந்து மீண்­ட­வர்.

மர­ணத்­தின் விளிம்பு வரை சென்று வந்­த­வர் கூறும் ஒவ்­வொரு வார்த்­தை­யும் கவ­னிக்­கப்­பட, பின்­பற்­றப்­பட வேண்­டி­யவை. இந்­தக் கொரோனா ஊர­டங்­கின் மூலம் பஞ்ச பூதங்­க­ளான நிலம், நீர், காற்று, ஆகா­யம், நெருப்பு ஆகி­ய­வற்­றைக் கடந்து வேறு யாரும் பெரிய ஆள் இல்லை எனத் தெரிந்து ­விட்­டது என்­கி­றார் ரமணா.

“புற்­று­நோ­யு­டன் போரா­டி­ய­போது 35 நாட்­கள் மருத்­து­வ­ம­னை­யில் இருந்­தேன். வெளி­யில் என்ன நடக்­கிறது எனத் தெரி­யா­மல், வெயில் கூடப் படா­மல் இருந்த காலம் அது.

“மர­ணத்­தின் அசல் முகத்தை எட்­டிப் பார்த்த தரு­ணங்­கள் அவை. அப்­போது பாதிக்­கப்­பட்­டது நான்­தான். உயிர் பிழைப்­பேனா என்­பது கூட எனக்­கான சுய­ந­லம்­தான். ஆனால் இப்­போது பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது ஒட்­டு­மொத்த உல­கம்.

“மன்­னரோ, அதி­பரோ யாவ­ரும் இதில் அடக்­கம். கிரீ­டம் வைத்­த­வரும் நடந்து போகி­ற­வ­ரும் செருப்பு இல்­லா­த­வ­ரும் ஒன்­று­தான். இவர்­கள் யாரை­யும் கிரு­மிக்கு வித்­தி­யா­சப்­ப­டுத்­தத் தெரி­ய­வில்லை,” என்று யதார்த்­தத்தை விவ­ரிக்­கி­றார் ரமணா.

இருப்­பதை வைத்­துக் கொண்டு வாழ்­வதே சிறப்பு என்­பதை இந்த ஊர­டங்கு காலம் உணர்த்தி உள்­ள­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், ஊரோடு ஒத்­து­வாழ் என்ற பழைய அறி­வு­றுத்­தல் இப்­போது உண்­மை­யாகி இருக்­கிறது என்­கி­றார்.

“உண்­மை­யில் நாம் வாழ்­வ­தற்­கான செலவு குறை­வு­தான். அடுத்­த­வர் மாதிரி வாழ்­வ­தற்­கான செல­வு­தான் அதி­கம் எனப் புரிந்­து­விட்­டது. நம் குழந்­தை­கள் இந்த ஊர­டங்கு நாட்­களில் வாழ்­வி­யல் பயிற்சி பெற்­றி­ருக்­கி­றார்­கள்.

“தலையில் தூக்கி வைத்து செல்­லம் கொடுத்து வளர்த்த குழந்­தை­க­ளுக்கு நடப்பு புரிந்­தி­ருக்­கிறது. மனி­தத்­தன்மை வெளி­வ­ரு­கிறது. ராவ­ண­னி­டம் மறைந்­தி­ருந்த வீணை வித்­வான் மாதிரி, அவ­னில் அமைந்­தி­ருந்த சிறந்த அர­ச­னுக்­கு­ரிய குணம் மாதிரி... நல்ல அம்­சங்­கள் வெளிப்­பட்­டன.

“ஆண்­கள் 50 நாட்­க­ளுக்கு மேல் பெண்­க­ளின் தாலி­ய­றுத்து குடிக்­கா­மல் இருந்­தார்­கள். இனி­மேல் சுய ஒழுக்­க­மும், கட்­டுப்­பா­டும் மட்­டுமே நம்­மைப் பாது­காக்­கும்,” என்­கி­றார் ரமணா.

இது இயற்கை அனைவரையும் சமத்துவப்படுத்தி விட்டு தன்னை புதுப்­பித்­துக் கொள்­கிற நேரம் என்று குறிப்­பி­டு­ப­வர், அனை­வ­ரும் எளி­மையை நோக்கி நகர வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­து­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!