விஜய் மகன் அறிமுகமாகும் படம்: தயாரிப்பாளர் விளக்கம்

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் தமிழில் அறிமுகமாகும் படத்தை தாம் தயாரிக்கவில்லை என்று தயாரிப்பாளர் பிரிட்டோ தெரிவித்துள்ளார். 

தற்போது விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தைத் தயாரிப்பது இவர்தான். 

இந்நிலையில் விஜய் மகன் சஞ்சய் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகளை பிரிட்டோ கவனித்து வருவதாகவும் அண்மையில் தகவல் வெளியானது. 

ஆனால் அவரோ இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

சஞ்சய்க்கு இயக்குநராவதில்தான் ஆர்வம் உள்ளது என்றும் சினிமாவில் நடிப்பாரா என்பது தமக்குத் தெரியாது என்றும் பிரிட்டோ கூறியுள்ளார்.

“சஞ்சய் கனடாவில் படித்து வருகிறார். படிப்பு முடிந்த பிறகே அவர் எந்தத் துறையைத் தேர்வு செய்வார் என்பது தெரிய வரும். அவரை வைத்து நான் படம் ஏதும் தயாரிக்கவில்லை.

“இது தொடர்பாக வெளியாகும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்,” என தயாரிப்பாளர் பிரிட்டோ தெளிவுபடுத்தி உள்ளார்.