நடிப்பில் அசத்தியுள்ள படம் ‘அதோ அந்த பறவை போல’

அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலா பால் நாயகியாக நடித்துள்ள படம் ‘அதோ அந்த பறவை போல’. ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், பிரவீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அடர்ந்த வனப்பகுதிக்குள் சிக்கிக் கொள்ளும் அமலா எப்படித் தப்பிக்கிறார் என்பதுதான் கதை. இதில் அவரது நடிப்பு பல விருதுகளைப் பெற்றுத் தரும் அளவுக்கு சிறப்பாக இருப்பதாகச் சொல்கிறார் வினோத். ஊரடங்கு முடிந்தபிறகு இப்படம் திரை காண உள்ளது.