ஐஸ்வர்யா ராய்க்கும் மகள் ஆராத்யாவுக்கும் கொவிட்-19

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கும் அவரது மகள் ஆராத்யாவுக்கும் கொவிட்-19 தொற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா நோய் இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்கள் தற்போது மும்பையின் நானாவதி மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தங்களுக்கு இந்நோய் இருப்பதாக தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவேற்றிய இவ்விரு நடிகர்களும் பதறாமல் இருக்கும்படி தங்கள் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு இந்நோய் இல்லை என சோதனைகள் குறிப்பிடுகின்றன.