‘பொருத்தமாக இருந்தால் நடிப்பேன்’

‘திமிரு’, ‘வெயில்’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்ரேயா ரெட்டி நீண்ட இடைவேளைக்குப் பிறகு நாயகியாக நடித்துள்ள படம் ‘அண்டாவக் காணோம்’.

வேல்மதி இயக்கியுள்ள இப்படம் விரைவில் திரை காண உள்ளது. இந்நிலையில் இந்தப் படம் எப்போது வெளியானாலும் இத்தனை நாள் காத்திருந்ததற்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என்கிறார் ஸ்ரேயா.

“இப்படத்தின் கதை அபாரமானது. அதில் நாங்கள் உணர்ந்ததை முழுமையாக வெளிப்படுத்துவதாக இப்படம் உருவாகி உள்ளது.

“அதிக படங்களில் நடிக்காததற்கு காரணம் உள்ளது. பெயருக்காக ஒரு படத்தில் நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. ஒரு கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பேன் என்று நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே நடிப்பேன்,” என்கிறார் ஸ்ரேயா.