சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படம் ஐந்து மடங்கு லாபம்

சூர்யா நடித்திருக்கும் ‘சூரரைப்போற்று’ படத்தை சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமும் ‘சிக்யா’ நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது.

தற்போது நிலவி வரும் சூழ்நிலை காரணமாக அனைவரும் திரை அரங்குகளில் படத்தை வெளியிடுவது சிரமமான ஒன்று என யோசித்துக் கொண்டிருக்கையில் 19 கோடி ரூபாயில் உருவான இந்தப் படம் சுமார் 100 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது பலருக்கும் வியப்பை அளித்திருக்கிறது.

இந்தப் படம் மே மாதம் வெளியாக வேண்டிய நிலையில் ஊரடங்கு உத்தரவால் படத்தின் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையில் படத்தை ‘ஓடிடி’ தளங்களில் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தன.

இந்நிலையில் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரான ராஜசேகர் பாண்டியன், “வரும் ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாளன்று ஒரு ஆச்சரியமான செய்தி இருக்கிறது,” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதேபோல் இந்தப் படத்தின் இசையமைப்பாளர்

ஜி.வி.பிரகாஷும் “சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘சூரரைப்போற்று’ குழுவில் இருந்து ஒரு செய்தி வர இருக்கிறது. வரும் நாட்களில் அது என்ன என்ற விவரம் தெரியும்,” என்று கூறியுள்ளார். இது சூர்யாவின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

கோடை விடுமுறைக்கு திரைக்கு வர இருக்கிறது என்ற அறிவிப்போடு கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்தக் காணொளியில் 19 வயது இளவயது சூர்யாவாக நடிக்க சூர்யா கடினமாக உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சி செய்வதை படம்பிடித்து வெளியிட்டு இருந்தனர்.

இந்தப் படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!