ரகுபதி இயக்கத்தில் உருவாகியுள்ள '9 குழி சம்பத்' இணையத் திரையரங்கில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையைப் பெற்றிருப்பதாக அப்படக்குழு தெரிவித்துள்ளது. வீட்டில் இருந்தபடியே நாம் பார்க்க விரும்பும் புதுப் படத்துக்கான தொகையைச் செலுத்தி படம் பார்ப்பதை 'பே பெர் வியூ' என்று குறிப்பிடுகிறார்கள். அந்த வகையில்தான் தனது படம் வெளியாகிறது என்கிறார் தயாரிப்பாளர் திருநாவுக்கரசு. கிராமத்தில் வெட்டியாக சுற்றிவரும் ஒரு போக்கிரி இளைஞனின் வாழ்க்கையில் திடீரென ஒரு பெண் குறுக்கிடுகிறாள். அதனால் அவள் வாழ்க்கை எப்படி திசைமாறிப் போகிறது என்பதுதான் இப்படத்தின் கதையாம். பாலா, நிகிலா ஆகிய இருவரும் நாயகன் நாயகியாக அறிமுகமாகிறார்கள்.
போக்கிரி இளைஞரால் திசைமாறும் பெண்ணின் கதை
1 mins read
ரகுபதி இயக்கத்தில் உருவாகியுள்ள '9 குழி சம்பத்' படத்தில் பாலா, நிகிலா ஆகிய இருவரும் நாயகன் நாயகியாக அறிமுகமாகிறார்கள். -

