ரகுல்: நிறைய கற்றுக்கொண்டேன்

ரகுல்: நிறைய கற்றுக்கொண்டேன்

1 mins read
b92bc3ee-3ea8-4ef2-a7dd-40927de92948
நம்மைச் சுற்றியுள்ள திறமைசாலிகளிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம் என்கிறார் ரகுல்பிரீத் சிங். படம்: ஊடகம் -

எந்தத் துறையாக இருந்தாலும் நம்மைச் சுற்றி திறமைசாலிகள் இருக்கும்போது பலவற்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிட்டும் என்கிறார் ரகுல் பிரீத் சிங்.

'இந்தியன்-2' படப்பிடிப்பின்போது நிறைய கற்றுக்கொண்டதாகவும் அண்மைய சமூக வலைத்தளப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"கமல், ஷங்கர் போன்ற திறமைசாலிகளுடன் இவ்வளவு சீக்கிரமாக இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. படப்பிடிப்பில் அவர்கள் நடந்துகொள்ளும் விதம் ஒரு காட்சியை அணுகுவது, மெருகேற்றும் விதம் உள்ளிட்டவற்றைக் கவனிக்க முடிந்தது.

"ஒரு நடிகையாக என்னைப் பற்றியும் எனது தொழில் குறித்தும் நிறைய கற்றுக்கொண்டேன். இந்தக் கற்றல் என்பது தன்னிச்சையாக நடந்தது. திறமைசாலிகளிடம் எந்தளவு திறமை இருக்கிறதோ அதே திறன் உங்களுக்கும் வந்து சேரும். உங்கள் கலையை மெருகேற்றும்," என்கிறார் ரகுல் பிரீத் சிங்.