நாயகியாகும் குழந்தை நட்சத்திரம்

நாயகியாகும் குழந்தை நட்சத்திரம்

1 mins read
42b2554a-4219-4bc9-af29-049dc731aa8a
'என்னை அறிந்தால்', 'விஸ்வாசம்' படங்களில் அஜித்தின் மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் அனிகா இப்போது மலையாளப் படம் ஒன்றில் நாயகியாக நடிக்க உள்ளாராம். படம்: ஊடகம் -

'என்னை அறிந்தால்', 'விஸ்வாசம்' படங்களில் அஜித்தின் மகளாக நடித்தவர் குழந்தை நட்சத்திரம் அனிகா.

இப்போது வளர்ந்து ஆளாகிவிட்ட நிலையில் மலையாளப் படம் ஒன்றில் நாயகியாக நடிக்க உள்ளாராம்.

பள்ளி மற்றும் கல்லூரியைக் களமாகக் கொண்டு உருவாகியுள்ள காதல் கதையில்தான் அனிகா நடிக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக திரையுலகில் மேலும் சாதிக்க வேண்டுமென அனிகாவுக்கு வாழ்த்தும் அறிவுரையும் கூறினாராம் அஜித். கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் அனிகாவின் புதுப்படத்துக்கான படப்பிடிப்பு துவங்க உள்ளதாகத் தகவல்.