வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் அவருக்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ள நிலையில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.
மணிரத்னம் இணையத் தொடர் ஒன்றை இயக்குகிறார். அதற்கு 'நவரசா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.
ஒன்பது பகுதிகளைக் கொண்ட இந்த இணையத் தொடரை மணிரத்னம் மட்டுமல்லாமல் ஜெயந்திரா, சித்தார்த் உள்ளிட்ட ஒன்பது இயக்குநர்கள் இயக்கப் போகிறார்களாம். இந்தத் தொடரில் மணிரத்னம் இயக்கும் பகுதியில்தான் சூர்யா நடிக்க உள்ளாராம்.
அநேகமாக டிசம்பர் இறுதியில் படப்பிடிப்பு நடக்கும் எனக் கூறப்படுகிறது. தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' படம் வெளியீடு காணத் தயார் நிலையில் உள்ளது. இதையடுத்து ஹரி இயக்கும் 'அருவா', வெற்றிமாறனின் 'வாடிவாசல்' உள்ளிட்ட படங்களில் நடிக்க உள்ளார் சூர்யா.
இரு படங்களிலும் முறுக்கேறிய உடல்வாகுடன் காட்சி அளிப்பாராம். அதற்காக தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு இருப்பதாகத் தகவல்.

