காதலை முழுமையாக அலச வருகிறது 'அலேகா'

காதலை முழுமையாக அலச வருகிறது 'அலேகா'

1 mins read
4ff28cf5-ab86-4974-878e-36dba60be974
'அலேகா' படத்தில் ஆரி அர்ஜுனா, ஐஸ்வர்யா தத்தா. படம்: ஊடகம் -

எஸ்.எஸ். ராஜமித்திரன் இயக்கத்தில் ஆரி அர்ஜுனா, ஐஸ்வர்யா தத்தா இணைந்து நடிக்கும் படம் 'அலேகா'. இது முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகும் படைப்பாம். சத்யா இசையமைக்கிறார். விவேகா, யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளனர். "இதற்கு முன்பு நான் 'அய்யனார்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானேன். அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகிறது 'அலேகா'. ஆரியும் ஐஸ்வர்யா தத்தாவும் நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக நடித்து வருகின்றனர். இதில் கடந்துபோன காதல், தற்போதைய காதல், எதிர்காலக் காதல் என்று படம் முழுக்க காதலின் பல்வேறு அம்சங்களை அலசியுள்ளோம்," என்கிறார் இயக்குநர் ராஜமித்திரன்.