நடன இயக்குநராகிறார் சாய் பல்லவி

நடன இயக்குநராகிறார் சாய் பல்லவி

1 mins read
fdee28d5-0abf-42aa-8492-5c1439936bf5
நடிகை சாய் பல்லவி. படம்: ஊடகம் -

நடிகை சாய் பல்லவியின் நடனம் அசத்தல் ரகம் என்பது எல்லோருக்கும் தெரியும்.

தமக்கு நடனமாடுவது என்றால் ரொம்பப் பிடிக்கும் என்று அவர் பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷுடன் அவர் நடனமாடிய 'ரவுடி பேபி' பாடலை லட்சக்கணக்கானோர் இணையத்தில் கண்டு ரசித்துள்ளனர்.

அதற்கு இருவரது அபாரமான அழகான நடன அசைவுகள்தான் முக்கிய காரணம் என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள்.

பொதுவாக முன்னணியில் உள்ள கதாநாயகிகளை ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும்படி கேட்பது கோடம்பாக்கத்து வழக்கம். அதற்காகப் பெரிய சம்பளமும் வழங்கப்படும்.

ஆனால் சாய் பல்லவி விஷயத்தில் சற்றே வித்தியாசமாக அவரை நடனமாட அழைக்காமல், ஒரே ஒரு பாடலுக்கு நடனம் அமைக்கும்படி கேட்டுள்ளனர்.

சேகர் கம்முலா இயக்கும் 'லவ் ஸ்டோரி' என்ற தெலுங்கு படத்தில் சாய் பல்லவியை நடன இயக்குநராகப் பணியாற்றும்படி அப்படக்குழு கேட்டுக் கொண்டுள்ளதாம்.

இதில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். நாயகி யாரெனத் தெரியவில்லை.

நாயகனும் நாயகியும் ஆடிப்பாடும் ஒரு பாடல் காட்சிக்கு சாய் பல்லவி நடன அசைவுகளை அமைக்க உள்ளார்.

இதுகுறித்து சாய் பல்லவி தரப்பு எந்தவித தகவலையும் வெளியிடவில்லை. மிக விரைவில் சம்பந்தப்பட்ட படக்குழுவினரே அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.