வீட்டிலும் மின்னும் திரை நட்சத்திரங்கள்

ஊரடங்கின்போது திரையுலகம் முடங்கிக் கிடந்தாலும் திரைக் கலைஞர்களில் பலர் சுறுசுறுப்பாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தங்களது தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப பல வேலைகளில் மூழ்கி உள்ளனர். நடிகர்கள் அஜித், விஜய், தனு‌ஷ், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் போன்ற இளம் நடிகர்களும் கமல், ரஜினி என மூத்த நாயகர்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

விஜய்யைப் பொறுத்தவரை எப்போதுமே ஓய்வு கிடைத்தால் அல்லது ஓய்வெடுக்க விரும்பினால் குடும்பத்துடன் வெளிநாடுகளுக்குப் பறந்துவிடுவது வழக்கம். ஆனால் இப்போதோ அடுத்த ஊருக்குக்கூட செல்ல முடியாதபடி ஊரடங்கு விதிமுறைகள் அவரை வீட்டுக்குள் கட்டிப் போட்டுள்ளது.

சென்னைக்கு அருகே உள்ள பனையூர் பகுதி பண்ணை வீட்டில் மனைவி சங்கீதா, மகள் சாஷாவுதுடன் பொழுதைக் கழித்து வருகிறாராம் விஜய். பல ஆண்டுகளாக தன் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களை மட்டும் உடன் தங்க வைத்துள்ளார். மற்றபடி வெளி ஆட்கள் யாருக்கும் அனுமதி இல்லை. நெருக்கமான திரையுலக நண்பர்களைக்கூட தன்னைச் சந்திக்க வரவேண்டாம் என்று அன்புக் கட்டளை இட்டுள்ளாராம்.

விஜய்யின் மகன் சஞ்சய் தற்போது கனடாவில் உள்ளார். அவருக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானபோது தவித்துப் போனாராம். எனினும் அவர் நலமாக இருப்பதாக பிறகு தெரியவந்துள்ளது. தினமும் தன் மகனுடன் மூன்று முறையாவது தொலைபேசி வழி பேசி வருகிறார் விஜய்.

அஜித்தைப் பொறுத்தவரை படப்பிடிப்பு இல்லை என்றால் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார். இந்த ஊரடங்கும் அதற்கு விதிவிலக்கல்ல. சென்னை அருகே உள்ள நீலாங்கரையில் குடும்பத்துடன் வசிக்கும் அவர், கடந்த ஏப்ரல் மாதம் தனியார் மருத்துவமனையில் மனைவி ஷாலினியுடன் காணப்பட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.

அஜித்தின் தந்தைக்கு உடல்நலமில்லை என்று கூறப்பட்டாலும் உண்மையில் அவரும் வழக்கமான மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டாராம். வீட்டுப் பணியாளர்கள் அனைவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளித்து தத்தம் வீட்டிலேயே இருக்குமாறு கூறிவிட்டார். இதனால் வீட்டு வேலைகள் அனைத்தையும் மனைவியுடன் பகிர்ந்துகொண்டு நல்ல இல்லத்தரசனாக பொழுதைக் கழித்து வருகிறார் அஜித்.

சூர்யா, கார்த்தி இருவரும் தங்கள் பெற்றோருடன் ஒரே வீட்டில்தான் குடியிருக்கிறார்கள். மேலும் இவர்களது சகோதரி பிருந்தாவும் தன் கணவருடன் இதே வீட்டில்தான் வசிக்கிறார்.

அண்மையில் ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநரை வீட்டிற்கு அழைத்து அப்படத்தின் வெற்றியைக் கேக் வெட்டிக் கொண்டாடியது இந்தக் கூட்டுக் குடும்பம். அதன்பிறகு யாரையும் அழைப்பதில்லை, இவர்களும் வெளியே செல்வதில்லை.

அனைத்து வீட்டு வேலைகளையும் வீட்டில் உள்ள அனைவரும் பகிர்ந்துகொண்டு கூட்டுக் குடும்பத்தின் இனிமையை அனுபவித்து வருகிறார்கள்.

விக்ரமைப் பொறுத்தவரை உடல்நலனில் மிகுந்த அக்கறை செலுத்துவார். சாதாரணக் காய்ச்சல் என்றாலும்கூட எப்படி வந்தது என்று தீவிரமாக யோசிப்பாராம். அப்படிப்பட்டவர் கொரோனா காலத்தில் எங்கே வெளியே வரப்போகிறார்?

ஐரோப்பாவில் கொரோனா கிருமித் தொற்றுப் பரவல் மோசமாக இருப்பதாக அறிந்ததும் அங்கு நடைபெற இருந்த படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டாராம். மேலும் தாம் மேற்கொள்ள இருந்த தனித்த பயணங்களையும் இப்போது வேண்டாம் என ஒத்தி வைத்துள்ளார்.

‘கோப்ரா’, ‘துருவநட்சத்திரம்’, மகன் துருவுடன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் என நான்கைந்து படங்கள் விக்ரமுக்காக காத்திருக்கின்றன. ஆனால் அவரோ வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு வெளியே செல்வதுதான் சரியாக இருக்கும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார் விக்ரம்.

தனுஷைப் பொறுத்தவரை ஓய்விருந்தால் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் கொரோனா அவரையும் பயமுறுத்தி இருக்கிறது போலும். மே மாதம் வரை அவ்வப்போது மாமனார் ரஜினி வீட்டுக்குச் சென்று வந்தவர் தற்போது அதையும் நிறுத்தி விட்டாராம். சென்னையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஒன்பதாவது தளத்தில் வசித்து வருகிறார் தனுஷ். ஏற்கெனவே வீட்டிற்குள் உடற்பயிற்சிக்கூடம் அமைத்துள்ளார். அதனால் இப்போது வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகளைக் கவனிப்பது ஆகியவற்றுடன் அடுத்த படத்துக்கான கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதுவதில் முனைப்பாக உள்ளார்.

சிவகார்த்திகேயனும் கிட்டத்தட்ட தனுஷைதான் பின்பற்றுகிறார். மகள் ஆராதனாவுக்கு இணையம் வழி பள்ளி வகுப்புகள் நடப்பதால் மகளுடன் அமர்ந்து உதவி செய்கிறாராம். மகளின் வீட்டுப் பாடங்களுக்கும் இவர்தான் பொறுப்பேற்றுள்ளார்.

‘தியா’, ‘ஐயப்பனும் கோஷியும்’ என அண்மைய சில வாரங்களில் ஏராளமான திரைப்படங்களைப் பார்த்திருக்கிறார் சிவா. தவிர, நிறைய இணையத் தொடர்களையும் பார்த்து வருகிறார்.

கமலைப் பொறுத்தவரை ‘தலைவன் இருக்கின்றான்’ படத்துக்கான திரைக்கதை, காட்சி அமைப்புப் பணிகளைக் கச்சிதமாக முடித்து வைத்துள்ளார். ஊரடங்கின்போது புதுமையான கதை ஒன்றை எழுதி இருப்பதாகவும் தகவல்.

ஊரடங்குக்குப் பிறகு மனித வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை மையப்படுத்தி இந்தக் கதையை எழுதி யிருப்பதாகக் கூறப்படுகிறது. மற்றபடி வெளியே செல்வதைக் கூடுமானவரை தவிர்த்து வருகிறார் கமல்.

மே மாத இறுதிவரை சென்னையில் இருந்த ரஜினி கொரோனா பரவல் தீவிரமடைந்ததும் மனைவி லதா, பேரன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்குச் சென்றுவிட்டார். சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தப் பண்ணையில் விளையும் காய்கறிகளைக் கொண்டுதான் சமையல் நடக்கிறது.

இந்த ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு தினமும் வெளியேறும் ஒரே நடிகர் என்றால் அது விஜய் சேதுபதிதான்.

தினமும் சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள தன் அலுவல கத்துக்கு காலையி லேயே வந்து விடுகிறார்.

அங்கு காத்திருக்கும் நண்பர்க ளுடன் கதை விவாதம் செய்வது, புதுப்படங்களுக்கான வசனங்களை எழுதுவது என்று சினிமா சார்ந்த பணிகளில் மூழ்கிவிடுகிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!