இலியானா: உடற்பயிற்சி ஒன்றே கவலைக்கு மருந்து

தமிழில் ‘நண்பன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இலியானா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

அவர் “எனக்கு சில நேரங்களில் மனதில் தாங்க முடியாத அளவு வருத்தங்களும் கவலைகளும் ஏற்படும். அந்த நேரங்களில் நான் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தால் போதும், எல்லாமே மாயமாக மறைந்துவிடும். எனவே அனைவரும் இந்த யுக்தியை கையாண்டு கவலைகளில் இருந்து மீளுங்கள்.

“உடற்பயிற்சி செய்யும்போது லட்சியத்தை நெருங்கி வருகிறேன் என்ற எண்ணம் ஏற்படும். நான் உடல் பருமனாகிவிட்டேன் என்று ஒரு முறை விமர்சனங்கள் வந்தன. அப்போதும் இதுமாதிரி தீவிர உடற்பயிற்சிகள் செய்து உடம்பை குறைத்து பழைய நிலைக்கு மாறினேன். தினமும் புது புது உடற்பயிற்சிகள் செய்கிறேன். இணையத்தைப் பார்த்தும் உடற்பயிற்சிகள் கற்றுக்கொள்கிறேன்.

“எனது உடற்பயிற்சி நேரம் எல்லா நாட்களும் ஒரே மாதிரி இருக்காது. ஒரு நாள் 75 நிமிடம், ஒரு நாள் 45 நிமிடம் ஒரு நாள் 2 மணிநேரம் உடற்பயிற்சி செய்வேன். ஆரோக்கியமாக இருப்பதற்கும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்கும் ரசிகர்கள் அனைவரும் தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.

“ஒரு தடவை செய்து பாருங்கள். அதன் பலன் எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று உங்களுக்கே தெரியும்,” என்று கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!