உண்மையில் உயர்ந்த மனிதர்

உண்மையில் உயர்ந்த மனிதர்

1 mins read
c218c095-fea3-469c-8110-0c7fb9552b01
மாணவர்களுக்கு நல்ல தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தன்னார்வலர்கள் சிலரை நியமித்து  'பள்ளிக்கு வேறு ஏதாவது உதவி தேவைப்படுமா?' என கவனிக்க சொல்லியுள்ளாராம் சுதீப். படம்: ஊடகம்  -

கன்னடத் திரையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சுதீப். பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'நான் ஈ' படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

தெலுங்கு, தமிழ் சினிமாவில் வில்லன் வேடங்களில் நடித்தாலும் 'இவர்தான் உண்மையான நாயகன்' என்று புகழும் அளவிற்கு பல நல்ல காரியங்களை செய்து வருகிறார். ஊரடங்கு நேரத்தில் 4 அரசு பள்ளிகளைத் தத்தெடுத்து, அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் சுதீப் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதையை 'டிஜிட்டல்' உலகில் மாணவர்கள் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கணினிகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

மாணவர்களுக்கு நல்ல தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தன்னார்வலர்கள் சிலரை நியமித்து 'பள்ளிக்கு வேறு ஏதாவது உதவி தேவைப்படுமா?' என கவனிக்க சொல்லியுள்ளாராம்.

பள்ளிக்கான உதவி மட்டுமின்றி ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை, மாணவர்களுக்கான உதவித்தொகை போன்ற வேலைகளையும் செய்து வருகிறாராம். இதனால் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.