பிரபல நடிகர் ஆதியும் நிக்கி கல்ராணியும் ஒருவரையொருவர் விரும்புவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
நடிகர் ஆதி வீட்டில் அவரின் தந்தையின் பிறந்தநாள் விசேஷத்தில் நிக்கி கல்ராணியும் கலந்துகொண்டு குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டதுதான் இந்த செய்திக்குக் காரணம்.
இவர்கள் இருவரும் இணைந்து 'யாகாவாராயினும் நாகாக்க', 'மரகத நாணயம்' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படங்களில் நடிக்கும் போதுதான் இருவருக்குள்ளும் காதல் தீ பற்றியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி வெளியாகியுள்ள தகவலை வழக்கம் போல் இருவரும் மறுப்பார்களா? அல்லது காதல் உண்மை தான், விரைவில் திருமணம் என்று அதிர்ச்சி கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறது கோலிவுட்.
நிக்கி கல்ராணி தென்னிந்திய நடிகையாவார். இவர் தமிழில் யாகாவராயினும் நாகாக்க படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழைத் தவிர கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடிக்கும் நடிகையாக இவர் உள்ளார்.

