கவலையில் சிவகார்த்திகேயன்

கவலையில் சிவகார்த்திகேயன்

1 mins read
b7d0db2d-b117-47c9-88de-7253b122af33
சிவகார்த்திகேயன் -

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படம் 'டாக்டர்'. இந்தப் படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கி வருகிறார்.

படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் நெல்சன், நாயகன் சிவகார்த்திகேயன் மூவரும் இணைந்து 'இனிமேல் டிக் டாக் எல்லாம் Banமா.. நேரா டூயட் பாட வாயேன் மா..' என்ற பாடல் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன்தான் பாடலுக்கான வரிகளை எழுதி இருக்கிறார். அதற்கு அனிருத் இசையமைத்து இணையத்தில் வெளியிட்டார்கள்.

இந்தப் பாடல் நடிகர் சிம்புவின் 'கண்ணம்மா கண்ணம்மா' என்ற பாடலைக் போல் இருப்பதாக இணையவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.

இதற்கு முன்னதாக 'தர்பார்' படத்தில் இடம் பெற்ற ரஜினிகாந்தின் பாடலின் இசை 'மாஸ்டர்' படத்தில் இடம் பெற்ற 'குட்டி ஸ்டோரி' என புதிய பாடலுக்கு பழைய மெட்டை காப்பியடிப்பதாக அனிருத் மீது ரசிகர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.

இதுபோல் காப்பி அடிப்பது எல்லாம் இயக்குநர் அட்லிக்குத்தான் கைவந்தகலை. இப்போது அனிருத் அவரையும் மிஞ்சிவிட்டார் என்று கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர்.

அதனால் சிவகார்த்திகேயன் என்ன செய்வது என்று தெரியாமல் கவலையில் இருப்பதாகக் கூறுகின்றனர் அவரின் நண்பர்கள்.