நடனமாடி வழுக்கி விழுந்த லட்சுமி மேனன்

நடனமாடி வழுக்கி விழுந்த லட்சுமி மேனன்

1 mins read
7a927e0f-d34f-443d-916f-ee6e167bb958
தரையில் தண்ணீர் தேங்கியிருப்பது தெரியாமல் நடனமாடியதால் வழுக்கி விழுந்துவிட்டாராம். படம்: சதீஷ் -

தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் அமையாததால் சோகத்தில் இருந்த லட்சுமி மேனன் புதுப்படம் ஒன்றில் ஒப்பந்தமானதை அடுத்து மீண்டும் உற்சாக நிலைக்குத் திரும்பியுள்ளார்.

பிரபுதேவாவுடன் இவர் நடித்துள்ள 'யங் மங் சங்' சில காரணங்களால் இன்னும் வெளியாகவில்லை. இதனால் வீட்டில் இருந்தபடியே படிப்பிலும் நடனத்திலும் கவனம் செலுத்தி வந்தார் லட்சுமி.

தினமும் சில மணி நேரம் தவறாமல் பயிற்சியில் ஈடுபடுபவர் அண்மையில் நடனமாடும்போது கால் தவறி கீழே விழுந்த காணொளிப் பதிவு ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

தரையில் தண்ணீர் தேங்கியிருப்பது தெரியாமல் நடனமாடியதால் வழுக்கி விழுந்துவிட்டாராம்.

இதற்கிடையே நடிகர் விஷால் நடிக்கும் புதுப்படத்தில் லட்சுமி மேனன் ஒப்பந்தமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவலை படக்குழு விரைவில் வெளியிடும் என்கிறது லட்சுமி தரப்பு.

மேலும், வாய்ப்புகளைக் குறி வைத்து தனது சம்பளத்தை லட்சுமி குறைத்துள்ளாராம்.