நடனமாடி வழுக்கி விழுந்த லட்சுமி மேனன்

நடனமாடி வழுக்கி விழுந்த லட்சுமி மேனன்

1 mins read
f4c49c53-993d-4cdd-bd41-df5930820499
-

தமி­ழில் எதிர்­பார்த்த அள­வுக்கு வாய்ப்­பு­கள் அமை­யா­த­தால் சோகத்­தில் இருந்த லட்­சுமி மேனன் புதுப்­ப­டம் ஒன்­றில் ஒப்­பந்­த­மா­னதை அடுத்து மீண்­டும் உற்­சாக நிலைக்­குத் திரும்­பி­யுள்­ளார்.

பிர­பு­தே­வா­வு­டன் இவர் நடித்­துள்ள 'யங் மங் சங்' சில கார­ணங்­க­ளால் இன்­னும் வெளி­யா­க­வில்லை. இத­னால் வீட்­டில் இருந்­த­ப­டியே படிப்­பி­லும் நட­னத்­தி­லும் கவ­னம் செலுத்தி வந்­தார் லட்­சுமி.

தின­மும் சில மணி நேரம் தவ­றா­மல் பயிற்­சி­யில் ஈடு­ப­டு­ப­வர் அண்­மை­யில் நட­ன­மா­டும்­போது கால் தவறி கீழே விழுந்த காணொ­ளிப் பதிவு ஒன்றை சமூக வலைத்­தளங்­களில் வெளி­யிட்­டுள்­ளார். தரை­யில் தண்­ணீர் தேங்­கி­யி­ருப்­பது தெரி­யா­மல் நட­ன­மா­டி­ய­தால் வழுக்கி விழுந்­து­விட்­டா­ராம்.

இதற்­கி­டையே நடி­கர் விஷால் நடிக்­கும் புதுப்­ப­டத்­தில் லட்­சுமி மேனன் ஒப்­பந்­த­மாகி இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இது­கு­றித்த அதி­கா­ரபூர்வ தக­வலை படக்­குழு விரை­வில் வெளி­யி­டும் என்­கிறது லட்­சுமி தரப்பு.

மேலும், வாய்ப்புகளைக் குறி வைத்து தனது சம்பளத்தை லட்சுமி குறைத்துள்ளாராம்.