படம் முழுவதும் 'முருங்கைப் புராணம்'

படம் முழுவதும் 'முருங்கைப் புராணம்'

2 mins read
76bec134-66cf-433f-b98a-d9423323b70c
'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தின் நாயகன் சாந்தனு, நாயகி அதுல்யா ரவியுடன் பாக்யராஜ். -

இயக்­கு­ந­ரும் நடி­க­ரு­மான பாக்­ய­ரா­ஜின் 'முந்­தானை முடிச்சு' படம் திரு­வி­ழா­போல திரை­ய­ரங்குகளில் மக்­க­ளால் கொண்­டா­டப்­பட்­டது.

அந்­தப் படத்­தின் வெற்­றிக்கு பாக்­ய­ரா­ஜின் திரைக்­கதை உத்­தி­யும் கதைக்­க­ள­மும் கார­ணம் என்­றா­லும், அதன் அமோக வெற்­றிக்கு காரா­ண­மாக இருந்­தது படத்­தில் இடம்­பெற்ற முருங்­கைக்­காய் சமாச்­சா­ரம்.

அதா­வது, முருங்­கைக்­காய் உணவு சாப்­பிட்­டால் பாலி­யல் ஆர்­வம் அதி­க­ரிக்­கும் என்­கிற சேதி அந்­தப் படத்­தில் சொல்­லப்­பட்­டது. இதை விரும்­பா­த­து­போல் 'ச்சீய்' எனச் சொல்­லிக்­கொண்டே ரசித்தவர்­கள் அதி­கம் பேர் என பாக்­ய­ராஜ் அடிக்­கடி கூறு­வார்.

இன்­ற­ள­வும் முருங்­கைக்­காய் சாம்­பார், முருங்­கைக்­காய் பொரி­யல் போன்­றவை இளம் தம்­ப­தி­க­ளால் நமட்­டுச் சிரிப்­போ­டு­தான் உண்­ணப்­ப­டு­கிறது.

அல்­வா­வும், மல்­லி­கைப் பூவும் பாலி­யல் விருப்­பத்தைத் தெரி­விக்­கும் குறி­யீ­டாக பார்க்­கப்­பட்ட நிலை­யில், பாக்­ய­ரா­ஜால் முருங்கைக்காயும் பாலி­யல் குறி­யீட்­டுப் பொரு­ளாக பார்க்­கப்­பட்­டது.

உண்­மை­யா­கவே முருங்­கைக்­காய் உண­வில் பாலி­யல் ஆசை­யைத் தூண்­டும் சத்து இருக்­கி­றதா என்­றால், அது­கு­றித்து அறி­வி­யல் பூர்­வ­மாக ஏதும் நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை என்­பதே உண்மை.

எனி­னும், நோய் எதிர்ப்பு சக்­திக்கு சிறந்­த­தாக, முருங்­கைப்பூ, முருங்­கைப்­பிஞ்சு, முருங்­கை­இலை, முருங்­கைக்­காய், முருங்­கைப்­பி­சின் என முருங்கை மரத்­தின் எல்லா அம்­சங்­களும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. அந்த வகை­யில் உண­வா­க­வும் மருந்­தா­க­வும் முருங்கை முக்­கி­யத்­து­வம் பெற்­றுள்­ளது.

எதுக்கு இப்போ இவ்­வ­ளவு பெரிய முருங்கை புரா­ணம்?

பல ஆண்­டு­க­ளுக்கு முன்பே திரை­யில் முருங்­கைக்­காயை பாலி­யல் குறி­யீ­டா­கச் சொல்லி, முருங்­கைக்கு மேலும் மவுசு சேர்த்த பாக்­ய­ராஜ், இந்த தலை­மு­றைக்­கும் முருங்­கைக்­காய் முக்­கி­ய­மா­னது எனச் சொல்ல வரு­கி­றார்.

ஆமாம், அவ­ரது மகன் சாந்­தனு, அதுல்யா ரவி ஜோடி­யு­டன் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க 'முருங்­கைக்­காய் சிப்ஸ்' எனும் புதிய படம் தயா­ரா­கிறது.

'முந்­தானை முடிச்சு' படத்­தில் மேலோட்­ட­மா­கச் சொல்­லப்­பட்ட முருங்­கைக்­கா­யின் சிறப்பு குறித்த தாக்­கம் இன்­ற­ள­வும் இருக்­கிறது. சாந்­தனு நடிக்­கும் 'முருங்­கைக்­காய் சிப்ஸ்' படத்­தில் பெரும்­ப­கு­தியே முருங்கை புரா­ணம்­தா­னாம்.

'முந்­தானை முடிச்சு' வெளி­யீடு கண்ட ஓரிரு தினங்­க­ளி­லேயே முருங்கை குறித்து படத்­தில் கூறப்­பட்ட விஷ­யங்­கள் சும்மா 'கிளுகிளுப்பு'க்காக சேர்க்­கப்­பட்­டது என்று விளக்­கம் அளித்­தார் பாக்­ய­ராஜ்.

இதற்­கி­டையே முந்­தானை முடிச்சு வெளி­யாகி 36 ஆண்­டு­கள் கடந்­து­விட்ட நிலை­யில், அதன் மறு­ப­திப்பை தயா­ரிக்க முடிவு செய்­துள்­ளார் இயக்­கு­ந­ரும் நடி­க­ரு­மான சசி­கு­மார். இதில் பாக்­ய­ராஜ் நடிக்­க­வில்லை என்­றும், இயக்­கு­நர் பொறுப்பை ஏற்­றுள்­ள­தா­க­வும் சசிகுமார் தெரிவித்துள்ளார்.