கதாநாயகி இல்லை கதையின் நாயகிதான் என்கிறார் வரலட்சுமி

கதாநாயகி இல்லை கதையின் நாயகிதான் என்கிறார் வரலட்சுமி

2 mins read
4c4fc8ef-e353-4683-b1b4-59659f89b779
கதை நன்­றாக இருந்­தால் போதும், என் கதா­பாத்­தி­ரம் சிறி­ய­தாக இருந்­தால் கூட தயக்­க­மின்றி நடிப்­பேன் என்கிறார் வரலட்சுமி. இவர் சமூக சேவை அமைப்பு ஒன்றை நிறுவி, அதன்மூலம் உதவி தேவைப்படுவோருக்கு உதவி வரும் பணிகளைச் செய்து வருகிறார். படம்: ஊடகம் -

ஒவ்­வொரு படத்­தி­லும் வித்­தி­யா­ச­மான கதா­பாத்­தி­ரங்­களை ஏற்று நடிப்­பதே தமது விருப்­பம் என்­கி­றார் வர­லட்­சுமி சரத்­கு­மார்.

வெளி­நாட்­டில் நாய­க­னு­டன் காதல் பாட­லுக்­காக நட­ன­மா­டு­வது, அழ­குப் பொம்­மை­யாக படம் முழு­வ­தும் வந்து போவ­தில் தமக்கு உடன்­பாடு இல்லை என்­றும் அவர் அண்­மைய பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

அண்­மைய சில படங்­களில் எதிர்­மறை கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­துள்­ளார் வர­லட்­சுமி. இத­னால் சமூக வலைத்­த­ளங்­களில் சிலர் மிக­வும் திமிர் பிடித்­த­வர், வில்லி என்று பல­வி­த­மாக விமர்­சித்து வரு­கின்­ற­னர்.

இது தொடர்­பாக எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு, இத்­த­கைய விமர்­ச­னங்­கள் தம்மை பாதிப்­ப­தில்லை என்று பதி­ல­ளித்­துள்­ளார். நாய­க­னு­டன் மரத்­தைச் சுற்றி வந்து ஆடிப்­பா­டு­வ­து போன்று நடிக்க பல பேர் இருக்­கி­றார்­கள். நானும் அதே­போல் நடிக்க வேண்­டும் என்­றால் அதற்கு என்­னால் உடன்­பட முடி­யாது. வாய்ப்பு கிடைக்­காதே என்று நான் கவ­லைப்­ப­டு­வ­தில்லை," என்­கி­றார் வர­லட்­சுமி.

தம்­மைப் பொறுத்­த­வரை கதை­தான் ஒரு படத்­தின் கதா­நா­ய­கன் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், கதா­நா­யகி என்று அழைப்­பதை விட, கதை­யின் நாயகி என்று அழைக்­கப்­ப­டு­வ­தையே தாம் விரும்­பு­வ­தா­கக் கூறி­யுள்­ளார்.

"எனக்கு ஒரு படத்­தில் யார் யார் நடிக்­கின்­ற­னர், எனது கதா­பாத்­தி­ரம் படம் முழு­வ­தும் வருமா? எனக்கு முக்­கி­யத்­து­வம் இருக்­குமா? என்­றெல்­லாம் கவ­லைப்­பட மாட்­டேன். கதை நன்­றாக இருந்­தால் போதும், என் கதா­பாத்­தி­ரம் சிறி­ய­தாக இருந்­தால் கூட தயக்­க­மின்றி நடிப்­பேன். நான் நாய­கியா, வில்­லியா என்­ப­தைப் பற்றி எல்­லாம் கவ­லைப்­ப­டு­வ­தில்லை," என்­கி­றார் வர­லட்­சுமி சரத்­கு­மார்.

இவ­ரது தலை­மை­யில் இயங்கி வரும் சமூ­க­சேவை அமைப்பு பல­ருக்கு உதவி வரு­கிறது. இதே­போல் அனை­வ­ரும் தங்­களால் இயன்ற உத­வி­களை பிற மக்­க­ளுக்­குச் செய்ய வேண்­டும் என வரலட்­சுமி வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

"எனது இலக்­கு­களை எட்­டிப் பிடிக்க வேண்­டும் என்­ப­தில் முனைப்­பாக உள்­ளேன். எனது இத்­த­கைய முயற்­சி­க­ளுக்கு அப்­பா­வின் ஆத­ரவு உள்­ளது.

"மேலும், ரசி­கர்­கள் பல­ரும் தாமாக முன்­வந்து என்­னு­டன் இணைந்து செயல்­ப­டு­கி­றார்­கள். அவர்­க­ளுக்கு என் நன்றி," என்­கி­றார் வர­லட்­சுமி.