சமூக வலைத்தளங்களில் எந்த நாயகியை எவ்வளவு பேர் பின்தொடர்கிறார்கள் என்பதில் இப்போது போட்டி நிலவுகிறது.
இளம் நாயகி பூஜா ஹெக்டேவுக்கும் சமந்தாவுக்கும் இடையே இப்படியொரு போட்டி இருப்பதாகத் தகவல்.
சில வாரங்களுக்கு முன்பு தமது டுவிட்டர் பதிவில் சமந்தாவைச் சீண்டும் வகையில் பதிவிட்டிருந்தார் பூஜா. பின்னர் யாரோ ஒரு விஷமி தனது டுவிட்டர் கணக்கில் நுழைந்து இவ்வாறு பதிவிட்டதாக அவரது தரப்பு விளக்கமளித்தது.
இதையடுத்து, இருதரப்பு ரசிகர்களும் மோதிக்கொண்டனர். இந்நிலையில் இன்ஸ்டகிராமில் சமந்தாவை 10.8 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர, பூஜாவைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை 11 மில்லியனாக அதிகரித்துள்ளது. மேலும் 'பாகுபலி' பிரபாஸ் நடிக்கும் 'ராதே சியாம்' என்ற படத்தில் பூஜா ஒப்பந்தமாகி உள்ளார். இதையடுத்து சமந்தாவை பூஜா வெற்றி கொண்டுள்ளதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இதற்கு சமந்தா ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

