கொரோனா ஊரடங்கு ஒவ்வொருவரையும் வெவ்வேறு விதமாக பாதித்துள்ளது.
நடிகை ரகுல் பிரீத்சிங்கை பொறுத்தவரை ஊரடங்கு காரணமாக உடற்பயிற்சிக் கூடத்துக்குப் போக முடியவில்லை எனப் புலம்புகிறார். அவரது உடற்பயிற்சிக்கூடம் வீட்டில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறதாம். அதனால் அங்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்.
எனினும் வீட்டிலேயே எளிய உடற்பயிற்சிகளையும் யோகாசனமும் செய்கிறார். இதுதொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
அவற்றைக் கண்ட ரசிகர்கள் பலர் குறைந்தளவு உடற்பயிற்சியிலேயே மிக கட்டுக்கோப்பாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
எனினும் உடற்பயிற்சிக்கூடம் சென்று அங்கு சில மணி நேரங்களைச் செலவிட்டால் மட்டுமே தம்மால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் என்கிறார் ரகுல் பிரீத்சிங்.

