பாதுகாப்புடன் கார் ஓட்டும் ரஜினி

பாதுகாப்புடன் கார் ஓட்டும் ரஜினி

1 mins read
fc75d877-9579-471f-bb1c-1957d13ff810
முகக்கவசம் அணிந்தவாறு லம்போர்கினி கார் ஒன்றை ஓட்டிச்செல்லும் நடிகர் ரஜினி காந்த். படம்: ஊடகம் -

நடிகர் ரஜினிகாந்த் உயர் ரக கார் ஒன்றை ஓட்டிச் செல்வது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத் தளங்களில் வெளியாகி உள்ளது. அவரது ரசிகர்கள் பலரும் இதை பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு வேளையில் சென்னை புறநகர்ப் பகுதியில் பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் ரஜினி. இந்நிலையில் அவர் விலை மதிப்புள்ள லம்போர்கினி கார் ஒன்றை ஓட்டிச்செல்லும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

அதில் வெள்ளை நிற வேட்டி சட்டையில் எளிமையாகக் காட்சி தருகிறார் ரஜினி. திடீரென இப்படியொரு புகைப்படம் வெளியாகி உள்ளது. அது யாருடைய கார், ரஜினி ஏன் அதை ஓட்டிப் பார்க்கிறார் என்பன போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும் பாதுகாப்புக்காக இருக்கைப் பட்டை அணிந்துள்ளார் ரஜினி. இதைக் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பலரும் அவரைப் பாராட்டியுள்ளனர்.