'80 வயது வரை நடிப்பேன்'

3 mins read
56d1a49c-3b33-4734-9cd3-46ae1c73c128
80 வயது வரை தொடர்ந்து நடித்­துக் கொண்டே இருக்க வேண்­டும் என்­பது தான் தமது விருப்­பம் என்று அண்­மைய பேட்டி ஒன்­றில் ஏமி ஜாக்­சன் தெரி­வித்­துள்­ளார். படம்: ஊடகம் -

தாம் திரை­யு­லகை விட்டு வில­கப் போவ­தாக வெளி­யான தக­வலை திட்­ட­வட்­ட­மாக மறுத்­துள்­ளார் ஏமி ஜாக்­சன்.

80 வயது வரை தொடர்ந்து நடித்­துக் கொண்டே இருக்க வேண்­டும் என்­பது தான் தமது விருப்­பம் என்று அண்­மைய பேட்டி ஒன்­றில் அவர் தெரி­வித்­துள்­ளார்.

ஒரு குழந்­தைக்கு தாயான நிலை­யில் ஏமி ஜாக்­சன் நடிப்­பில் கடை­சி­யாக கடந்த 2018ல் வெளி­யான படம் '2.0'. அதன் பிறகு இங்கிலாந்தில் தங்­கியிருந்தார்.

இந்­தி­யா­வில் இல்­லா­தது ஒரு­வித ஏக்கத்தை ஏற்­ப­டுத்தி இருப்­ப­தாகக் குறிப்­பிட்­டுள்ள ஏமி, தாம் இன்­றுள்ள நிலைக்­கும் நடி­கை­யாக உரு­வா­ன­தற்­கும் இந்­தியா தான் கார­ணம் என்று தெரி­வித்­துள்­ளார்.

"ஏ.எல்.விஜய் இயக்­கத்­தில் எனது முதல் பட­மான 'மத­ரா­ச­பட்­டின'த்தில் நடித்த போது நான் பதின்ம வய­தில் இருந்­தேன். சினிமா குறித்து அதிக விவ­ரங்­கள் தெரி­யாது.

"எனி­னும் சில அனு­ப­வங்­க­ளின் துணை­யோடு நான் தனித்து நிற்க கற்­றுக் கொண்­டேன். எதை­யும் அர்ப்­ப­ணிப்­பு­டன் செய்­யும் மனப்­போக்­கும் குண­மும் என்­னுள் வந்­தி­ருக்­கிறது. இன்­ன­மும் கூட பல விஷ­யங்­க­ளையும் கற்­றுக்­கொள்­ளும் ஆர்­வம் எனக்கு இருக்­கிறது," என்­கி­றார் ஏமி ஜாக்­சன்.

எல்­லோ­ருக்­குமே வாழ்க்­கை­யில் நிறைய வாய்ப்­பு­கள் கிடைக்க வேண்­டும் எனும் எதிர்­பார்ப்பு இருக்­கும் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், தானும் அதற்கு விதி­வி­லக்­கல்ல என்­கி­றார்.

"அதே வேளை­யில் வாய்ப்­பு­கள் அமைந்­தா­லும் அர்ப்­ப­ணிப்­பும் திற­மை­யும் இல்­லா­த­வர்­க­ளால் கலைத்­து­றை­யில் தாக்­குப்­பி­டிக்க முடி­யாது.

"இதை புரிந்­து­கொண்­ட­தால் என் வளர்ச்சி சீராக இருந்­தது. நான் திரை­யு­ல­கில் நடிக்க வந்து எட்டு ஆண்­டு­கள் கடந்­து­விட்­டன. தொடக்­கம் முதலே தமிழ், தெலுங்கு, இந்தி, கன்­னட மொழிப் படங்­களில் முன்­னணி நாய­கர்­க­ளு­டன் நடிக்­கும் வாய்ப்பு கிடைத்­தது," என்­கி­றார் ஏமி.

கடந்த காலத்­துக்கு திரும்­பிச் செல்­லும் வாய்ப்பு கிடைத்­தால் சில விஷ­யங்­களை மாற்றி அமைக்க விரும்­பு­வீர்­களா? என்று கேட்­டால், அதற்கு அவ­சி­யமே இல்லை என்­பதே இவ­ரது பதி­லாக உள்­ளது.

"சினி­மாத் துறை­யில் நடி­கை­யா­வது என்பது சாதிக்க முடி­யாத விஷ­யம் என்று நினைத்த சம­யத்­தில் எனக்கு அது சாத்­தி­ய­மா­னது. இயக்­கு­நர் ஏ.எல்.விஜய் என்னை அணுகி, கதை சொல்லி நடிக்க வைத்­தார்.

"நான் நல்ல முடி­வைத்­தான் எடுத்­தி­ருக்­கி­றேன் என்று தோன்­றி­ய­தால் நடிக்க சம்­ம­தித்­தேன்," என்று சொல்­லும் ஏமி ஜாக்­சன், இது­வரை தாம் ஏற்று நடித்த அனைத்து கதா­பாத்­தி­ரங்­க­ளுமே தமக்­குப் பிடித்­த­மா­னது என்­கி­றார்.

அனைத்­துப் படங்­க­ளி­லும் அர்ப்­ப­ணிப்புடன் நடித்­த­தாகக் குறிப்­பி­டு­ப­வர், கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக நாய­கிக்கு முக்­கி­யத்­து­வம் உள்ள படங்­களில் நடிப்­ப­தற்கு முன்­னு­ரிமை அளிப்­ப­தாக தெரி­வித்­துள்­ளார்.

"எப்­போ­துமே நான் நடிக்­கும் படத்­தின் கதை­யை­யும் கதா­பாத்­தி­ரத்­தை­யும் மெரு­கேற்ற விரும்­பு­கி­றேன். மேலும் இவ்­விரு அம்­சங்­களில் மிகுந்த நம்­பிக்கை வைத்­தி­ருக்­கி­றேன்.

"எனது திறமை மீது இன்­ன­மும் நம்­பிக்கை உள்­ளது. எனவே எனது திரைப்­ப­ய­ணத்­துக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கும் எண்­ணம் இது­வரை இல்லை. எனது பய­ணம் தொடர வேண்­டும் என விரும்­பு­கி­றேன்.

"இப்­போது தெரிந்துகொண்ட சில விஷ­யங்­களை முன்பே அறிந்­தி­ருந்­தால் நன்­றாக இருந்­தி­ருக்­கும் என அவ்­வப்­போது தோன்­றும். ஒரு­வ­ரது வயது அதி­க­ரிக்­கும் போது முதிர்ச்­சி­யும் அதி­க­மா­கும்," என்­கி­றார் ஏமி ஜாக்­சன்.

தற்­போது தனது மகன் ஆன்ட்­ரி­யா­சுக்கு முன்­னு­ரிமை அளிக்க வேண்­டி­யுள்­ளது என்­றும் தாம் மிக விரை­வில் வெள்­ளித்­தி­ரை­யில் தோன்ற அதிக வாய்ப்­புள்­ளது என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

"ஒரு நடி­கை­யாக என் மீது எனக்கு மிகுந்த நம்­பிக்கை உள்­ளது. 80 வய­தா­னா­லும் கூட தொடர்ந்து நடிக்க வேண்­டும் எனும் ஆசை­யும் இருக்­கிறது.

"எனவே குடும்­பக் கட­மை­களை நிறை­வேற்­றிய பிறகு மீண்டும் நடிக்க வேண்டும் எனத் திட்­ட­மிட்­டுள்­ளேன்.

"ரசி­கர்­க­ளி­டம் ஒரு நடி­கை­யாக பெயர் எடுத்த நான் நல்ல தாயா­க­வும் இருக்க விரும்­பு­கி­றேன்," என்­கி­றார் ஏமி ஜாக்­சன்.

அண்­மை­யில் தன்­னைத் தேடி வந்த சில வாய்ப்­பு­களை ஏற்க மறுத்­து­விட்­டதாகச் சொல்பவர், தாம் அவசரப் படவில்லை என்கிறார்.